Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனி கோயிலில் பக்தர்கள் செல்போன்கள் பறிமுதல்; ரூ.500 அபராதம்.. உண்டியலில் போடுவதாக மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஆயிரம் ரூபாய் அபராதம் தர வேண்டும் எனவும் இல்லையெனில், செல்போன்களை உண்டியலில் போட உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆலய நிர்வாகம் சார்பில் செல்போனை பாதுகாக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாமி தரிசனம் முடிந்த பின்னர் செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Mobile Phone Ban At Palani Murugan Temple fine of Rs.500

கருவறையில் உள்ள தெய்வங்களை புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்பதற்காகவே செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களில் கருவறையில் உள்ள தெய்வங்களின் சிலைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை கோயிலில் செல்போன் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் பயன்படுத்தியவர்களிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக்காக்கும் விதமாக செல்போன் தடையை நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.

திருப்பதியில் வாசலில் புகைப்படம் எடுக்க முடியாது; தமிழ்நாட்டில் சாமி சிலை முன் செல்பி எடுக்கின்றனர். கோயில் அர்ச்சகர்களே புகைப்படம் எடுத்து தங்களின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர் என நீதிபதிகள் தங்களின் உத்தரவின் போது தெரிவித்திருந்தனர்.

இதனிடையே அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தங்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். மேலும் அனுமதியின்றி கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களிடமிருந்து அறநிலையத்துறை ஊழியர்கள் செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் செல்போன் வைத்திருந்தவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி ஏராளமானோர் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். அதில் சிலர் செல்போன்கள் வைத்திருப்பது தெரிய வந்ததால், கோயில் ஊழியர்கள் அவர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்து அதற்காக டோக்கன்கள் வழங்கி உள்ளனர்.

டோக்கன்களை திரும்ப கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ள வந்த போது செல்போன் ஒன்றுக்கு தலா 500 ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும் எனவும், இல்லையெனில் செல்போன்கள் உண்டியலில் போடப்படும் எனவும் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில பக்தர்கள், தங்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் கேட்பதாகவும், ஆனால் அதற்கு முறையாக டோக்கன்கள் வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

ஒரே சமயத்தில் ஏராளமானவர்கள் செல்போன்களை திரும்ப பெற வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒரு சிலர் ஆயிரம் ரூபாய் கேட்டு ஊழியர்கள் மிரட்டுவதாக குற்றம்சாட்டி வீடியோ பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பழனி முருகன் கோயில் நிர்வாகம், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழனி முருகன் கோயிலுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் நிர்வாகம் சார்பிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதால் அவற்றை ஊழியர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதோடு, முறையான ரசீதுகளையும் வழங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே செல்போன்கள் திரும்ப வழங்கும் இடத்தில் முறையான வசதிகள் எதுவும் இல்லை எனவும், இது குறித்து உரிய அறிவிப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பழனி முருகன் கோயில் நிர்வாகம் வெளியிட வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அபராதத் தொகைக்கு உரிய ரசீதுகளை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் பழனி முருகன் கோயிலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+