தமிழ்நாட்டை யாரும் அசைச்சுக்கவே முடியாது! மீனாட்சிக்கு கல்யாணம்.. சீர்கொண்டு வந்த இஸ்லாமியர்கள்..!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொண்டு வந்ததோடு, விநாயகர் கோவில் நிகழ்ச்சிக்கு வரவேற்பு ப்ளக்ஸ் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மத நல்லிணக்கத்திற்கும் சகோதரத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் முன்னோடியாக திகழும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என பாரதியார் போற்றும் வகையில் கல்வியில் சிறந்து வழங்கும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் எந்தவித போட்டி பொறாமையின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுதான் தமிழ்நாடு: அப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் பிற மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் வழக்கம். மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவுக்கு ரோஸ் மில்க் வழங்கும் இஸ்லாமியர்கள், பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், மசூதி திறப்பு விழாவுக்கு சீர் கொண்டு சென்ற இந்துக்கள் என பல செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில் மற்றொரு சம்பவம் அதே போல நடந்திருக்கிறது.
மீனாட்சி திருக்கல்யாணம்: அப்படி ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் ஸ்ரீ சக்தி சந்தான கணேசர் திருக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் வருட அபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ சக்தி சந்தான கணேசன் மற்றும் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ பரமேஸ்வரி சமேத பரமேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத் பவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் காலபைரவர் ஆகிய தெய்வங்கள் கொண்ட கோவில் அமைந்துள்ளது.

இஸ்லாமியர்கள் சீர்வரிசை: இந்த கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் இஸ்லாமிய பெருமக்கள், மணமகள் வீட்டாராக பங்கேற்று சீர்வரிசைகளை அளித்தனர். பூமாலை, வளையல், பட்டுச்சேலை, பழங்கள் உட்பட 21 வகை சீர் தட்டு கொண்ட சீர்வரிசையை அளித்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஜமாத் தலைவர்கள்: இதில் ரவுண்ட் ரோடு புதூர் ஜூம்மா மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவாச்சாரியார்களால் மங்கள நான் பூட்டப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது தாலி கயிறுகளை மாற்றிக் கொண்டனர். அதனை தொடர்ந்து திருக்கல்யாண விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஒற்றுமையுடன் மக்கள்: திண்டுக்கல் மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது ரவுண்ட் ரோடு புதூர். இந்த பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் மசூதியும் இந்துக்கள் வழிபட கோவிலும் உள்ளது. இதுவரை நடைபெற்று வந்த அனைத்து விழாக்களிலும் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கம். மேலும் இதுவரை அந்தப் பகுதியில் எந்தவிதமான மோதலும் ஏற்பட்டு கிடையாது.
குடும்ப வழக்கம்: மேலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இரு தரப்பை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கும் சீர்கொண்டு வந்ததாக கூறுகின்றனர் இஸ்லாமியர்கள். மேலும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் நாங்கள் என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது.. சகோதரர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.. அதன் காரணமாகத்தான் நாங்கள் உரிமையுடன் சீரை கேட்டு பெற்று இருக்கிறோம் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications