அச்சுறுத்தும் உண்ணி காய்ச்சல்.. தமிழகத்தில் அடுத்தடுத்து பலருக்கு பாதிப்பு! அறிகுறி & சிகிச்சை என்ன?
திண்டுக்கல்: பருவமழை மற்றும் குளிர் மழைக் காலத்தில் பொதுவாகவே மாநிலத்தில் பல வகை நோய் பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் இதுபோல பரவும் மர்ம காய்ச்சலால் மிக மோசமான பாதிப்புகள் கூட ஏற்படுத்தும். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் திடீரென உண்ணி காய்ச்சல் பரவுகிறது. ஏற்கனவே கடந்தாண்டு இருவர் இதனால் உயிரிழந்த நிலையில், இப்போது மீண்டும் எட்டு பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை அல்லது குளிர் காலம் தொடங்கிவிட்டாலே கொசுத் தொல்லை அதிகரிக்கும். இதனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பொதுவாகவே பல்வேறு வகையான பாதிப்புகளும் பரவும்

உண்ணி காய்ச்சல்:
தமிழ்நாடு அரசு சார்பில் இதுபோன்ற நோய்ப் பாதிப்புகளைத் தடுக்க தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தொடர்ந்து மாநிலத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் திடீர் திடீரென பரவி வருகிறது.. கடந்தாண்டு ஏற்கனவே பல ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
கடந்தாண்டு இறுதியிலேயே மாநிலத்தில் உண்ணி காய்ச்சல் பரவி நிலையில், இதனால் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டது. இதற்கிடையே இப்போது மீண்டும் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உண்ணி காய்ச்சல் பரவி வருகிறது.
8 பேருக்குப் பாதிப்பு:
திண்டுக்கல் பகுதியில் இப்போது இதுவரை 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்குள்ள வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணி காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் பகுதிகளிலும் உண்ணி காய்ச்சல் பரவல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு பாதிப்பு என்ற வீதத்தில் உண்ணி காய்ச்சல் பரவி வருவதாகச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். உண்ணி காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோருக்குத் தனி வார்ட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் விளக்கம்
உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாதிப்பு கிராமங்களில் தான் அதிகம் உள்ள நிலையில், இதனால் கிராமங்களில் முகாம் அமைத்து நோய்த் தொற்றைக் கண்டறிந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவர் உயிரிழப்பு:
முன்னதாக கடந்த மாதம் இதே திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (61), ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் இருவர் உண்ணி காய்ச்சலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் உண்ணி காய்ச்சலால் இருவர் உயிரிழந்த நிலையில், இந்த மாதம் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்ணி காய்ச்சல் அறிகுறிகள் & சிகிச்சை
உண்ணி காய்ச்சலை ஆங்கிலத்தில் கியாசனூர் வன நோய் (KFD) என்று அழைக்கப்படுகிறது. Hemaphysalis spinigera எனப்படும் உண்ணிகளால் இவை பரவும். பொதுவாகக் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தசை வலி, வாந்தி, தொண்டைப் புண் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.
டெங்கு பாதிப்பைப் போலவே இதன் அறிகுறிகள் இருக்கும் என்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications