எனக்கு என் அப்பா இருக்கார்.. மேடையில் நெல்லை முபாரக் உருக்கம்.. திண்டுக்கல் சீனிவாசன் கண்ணீர்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுக நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் பேச பேச முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விம்மி விம்மி அழுதார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக 33 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், புதுவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
அவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துவைத்தார். அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது விழா மேடையில் நெல்லை முபாரக் பேசினார். அவர் பேசுகையில் எனது அப்பா 2015 இல் இறந்துவிட்டார். எனது தாய் 2022 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். தாய், தந்தை இல்லாத எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இரு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்துடன் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் நான் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். இந்த உறவுகளை மட்டும் நான் இழப்பதற்கு தயாராக இல்லை. எம்ஜிஆர் எப்போது அதிமுகவை தொடங்கினாரோ அப்போதே திண்டுக்கலில் மாயத்தேவருடன் போட்டியிட்டு எம்ஜிஆரை வெற்றி பெற செய்த சின்னம் இரட்டை இலை.
அதற்கு மேலாக இரு சிங்கங்கள் இருக்கிறார்கள். ஒரு அப்பா திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். இன்னொரு அப்பா நத்தம் விஸ்வநாதன் இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்? அதையும் தாண்டி எது வந்தாலும் எதிர்கொள்ளும் சக்தியுடன் அஇஅதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என முபாரக் கேட்டார். அப்போது திண்டுக்கல் சீனிவாசனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் துக்கம் தொண்டையை அடைத்ததும் அழக் கூடாது என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டார்.
அனைத்து மதங்கள், அனைத்து ஜாதிகளின் முகமாக இருந்து உழைக்க உங்களுக்கு முகமது முபாரக் என்ற அடையாளத்துடன் நான் இருக்கிறேன். மோடியா லேடியா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்டார். தற்போது மோடியா எடப்பாடியா என்ற நிலை உருவாகிவிட்டது. தமிழகத்தில் எந்த காலத்திலும் அதிமுகதான் மாபெரும் எதிர்க்கட்சியாக இருக்கும். சமூகநீதி இருக்கிறது என கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்கள் வேட்பாளர்களில் சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் இருந்தால் கூறுங்கள்,
திமுகவை வரும் 2026 சட்டசபை தேர்தலில் அகற்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு அச்சாரமாக இருக்கும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது அனைத்தும் உண்மை. அதிமுக எத்தகைய தடைகளையும் தாங்கி நிற்கும் மாபெரும் இயக்கம். தமிழக கோட்டை அல்ல டெல்லி கோட்டையில் கூட அதிமுகவை அசைக்க ஆள் இல்லை. பாஜகவுக்கு அடிமை நாங்கள் இல்லை என்பதை எடுத்து காட்டிவிட்டோம்.
வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திமுகவிற்கும் டெல்லி அரசுக்கும் ஒரு முடிவு கட்டும் தேர்தலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும் என முபாரக் தெரிவித்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications