பழனியில் நாளை முதல் தரிசன கட்டணம் ரத்து.. தைப்பூச விழாவையொட்டி குவியும் பக்தர்கள்!
திண்டுக்கல்: பழனி மலைக்கோயிலில் நாளை முதல் பிப்ரவரி 12 வரை சாமி தரிசனத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் வரும் 11 ஆம் தேதி தைப்பூச விழாவையொட்டி நாளை முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாளை (பிப்ரவரி 10) திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள் (11ஆம் தேதி) தைப்பூசமும், தேரோட்டமும் நடைபெற உள்ளது. முருகனை தரிசித்து அருள் பெற நாள்தோறும் பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்தனர். அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் குவிந்ததால், சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்குச் செல்ல வின்ச், ரோப் கார் உள்ளிட்ட பக்திகளில் பக்தர்கள் கூட்டம் திரண்டு காணப்பட்டது.
பழனியில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மேலே மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவும் சாமி தரிசனம் செய்து முடித்து மங்கம்மாள் மண்டபம் வழியாக கீழே இறங்கி வரவும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடிவாரம் மற்றும் கிரிவலவீதி பகுதிகளில் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்து வந்து ஆடிப்பாடி மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளதால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பழனி மலைக்கோயிலில் நாளை (பிப்ரவரி 10) முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் 3 நாட்களுக்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசன வழியில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச விழாவுக்கு வரும் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications