அவன தூக்கி வெளிய போடுடா..எட்டி பார்த்தால் காலி சேர்கள்! அப்செட்டான அன்புமணி..! பாமகவில் பஞ்சாயத்து.!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனது இறுதிக் கட்ட பிரசாரத்துக்காக வந்திருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக் கொண்டிருந்த போதே கூட்டம் கலைந்து சென்றதால் சுமார் ஒரு மணி நேரம் காலி சேர்கள் முன் உரையாற்றும் நிலை ஏற்பட்டது. மேலும் உள்ளூர் பாமக நிர்வாகிகளை வேட்பாளர் திலகபாமா கண்டுகொள்ளாததால் எங்கு பார்த்தாலும் பாஜக கொடிகளாகவே தென்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் களம் தனது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கும் நிலையில் தலைவர்கள் பலரும் தங்களது இறுதி கட்ட வாக்கு சேகரிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல்லில் நேற்று பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்
அன்புமணி ராமதாஸ்: பிரசாரத்திற்கு அன்புமணி வருவார் என அறிவிக்கப்பட்டு திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் ஏராளமான பொதுமக்களும் வாக்காளர்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால் பாமக நிர்வாகிகளை வேட்பாளரான திலகபாமா கண்டு கொள்ளாததால் பெரும்பான்மையானோர் பாஜக கொடிகளுடனும், பாஜக துண்டுகளை அணிந்திருந்தபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தனர். இது குறித்து உள்ளூர் பாமக நிர்வாகிகளிடம் பேசியபோது, திண்டுக்கல்லில் பிறந்தவர் என்றாலும் தொகுதியில் எந்த நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத திலகபாமா கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஐ.பெரியசாமியிடம் டெபாசிட்டை இழந்தார்.

நிர்வாகிகள் அதிருப்தி: இந்த நிலையில் 6 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட நாடாளுமன்ற வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்ட போது நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும் கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டவரும் மாவட்ட செயலாளர் ஆக இருந்த ஜோதி முத்துவை திலகபாமாவின் தூண்டுதலின் பெயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். மேலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தாமல் முழுக்க முழுக்க பாஜக வேட்பாளர் போலவே திலகபாமா நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை தவிர்த்து உள்ளூர் நிர்வாகிகளான நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட யாரையுமே அழைக்கவில்லை.
கட்சியினர் புறக்கணிப்பு: வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் திலகபாமா உள்ளூர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதில்லை என குற்றம் சாட்டியே தற்போது அன்புமணி பிரச்சாரத்திலும் பொதுமக்களை அழைத்து வரவில்லை எனக் கூறினர். தொடர்ந்து ஏழு மணிக்கு அன்புமணி ராமதாஸ் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாகவே மேடைக்கு வந்தார் அவரை மாவட்ட செயலாளர்களும் பாஜக கூட்டணி நிர்வாகிகளும் வரவேற்றனர் தொடர்ந்து கையில் மாம்பழத்தை எடுத்து பொதுமக்களிடம் காட்டிய அன்புமணி ஆரவாரமாக பிரசாரத்தை தொடங்கினார்.

கடுப்பான அன்புமணி: அப்போது மது போதையில் இருந்த ஒருவர் மேடைக்கு அருகே வந்து திமுகவில் காசு கொடுக்குறாங்க என கத்திக் கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான அன்புமணி ராமதாஸ் 'அவனை தூக்கி வெளியே போடுங்க' என ஒருமையில் திட்டி விட்டு பேசத் தொடங்கினார். அன்புமணி ராமதாஸ் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்கிருந்த பொதுமக்களும் வாக்காளர்களும் சாரை சாரையாக கிளம்பி செல்லத் தொடங்கினர். கூட்டம் செல்வதை பார்த்தும் தனது பேச்சை குறைத்துக் கொள்ளாத அன்புமணி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.
காலியான சேர்கள்: தமிழ்நாட்டில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது, அதிமுகவும் திமுகவும் ஊழல் கட்சிகள், புவி வெப்பமயமாதல், நீர் மேலாண்மை என அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போது மீதம் இருந்த பொதுமக்களும் கலைந்து செல்ல தொடங்கினர். ஒரு கட்டத்தில் நிர்வாகிகள், மேடையில் இருந்தவர்கள், ஊடகத்தினரை தவிர யாருமே இல்லாததால் அன்புமணி ராமதாஸ் பேச்சை முடித்துக் கொண்டார். அப்போது அனைத்து சேர்களும் காலியாக இருந்தது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது பின்வரிசையில் இருந்த சேர்களை எடுத்து வைக்கத் தொடங்கினர்.
என்ன காரணம்: பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்திருந்த போதும் அவர்கள் பெரும்பாலும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாஜக நிர்வாகிகள் பேசி முடித்ததும் கைதட்டி விட்டு கிளம்பி சென்று விட்டனர். ஆனாலும் நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வந்திருந்த அன்புமணி பேச வேண்டியதை கட்டாயம் பேச வேண்டிய ஆக வேண்டும் என நினைத்தாரோ என்னவோ சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அதே நேரத்தில் காலி சேருகள் முன்பு அன்பு அன்புமணி உரையாற்றியது பாமக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேட்பாளர் தங்களை கண்டு கொள்ளவில்லை என்பதற்காக பாமக தொண்டர்களை உள்ளூர் நிர்வாகிகள் அழைத்து வரவில்லை என்றும், இது கட்டாயம் வாக்குப்பதிவின் போதும் எதிரொலிக்கும் என்கின்றனர் திண்டுக்கல் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications