பழனி கோவில் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி பறந்து கொண்டே பயணிக்கலாம்! வர போகும் சூப்பர் அறிவிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரோப்கார் சேவை 44 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக ரோப் கார் பெட்டிகளுக்கும், மோட்டார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூசணிக்காய் சுற்றப்பட்டு ரோப்கார் இயக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். யானை பாதை படிப்பாதை வழியாக கால்நடையாகவும் மின் இழுவை ரயில் வழியாக சுமார் பத்து நிமிடத்திலும் மலைக் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் பெரும்பான்மையான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு எளிதில் சென்று வர ரோப் கார் சேவையை விரும்புகின்றனர். ரோப் கார் மூலம் மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தரத்தில் பயணித்தவாறு பழனி மற்றும் கொடைக்கானல் மலைகளின் அழகை ரசித்தவாறும் வயல்வெளிகளை பார்த்தவாறு பயணிப்பது பக்தர்களுக்கு புது புத்துணர்ச்சியை கொடுக்கும். இதனால் பண்டிகைக் காலங்கள் மட்டுமல்லாது, சாதாரண நாட்களில் கூட ரோப் கார் மையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். இந்நிலையில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு ரோப் கார் சேவை கடந்த அக்டோபர் மாதம் 07ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் ,உருளைகள் ,பெட்டிகள் பொருத்தபட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேலும், புதிதாக 6 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் மற்றும் 5 லட்சம் மதிப்பிலான புதிய பேரிங்குகள், மாற்றப்பட்டு பெட்டிகளுக்கு வண்ணம் பூசப்பட்டது.

பின்னர் ஐஐடி வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ரோப் கார் பெட்டிகளுக்கும், மோட்டார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூசணிக்காய் சுற்றப்பட்டு ரோப்கார் இயக்கப்பட்டது. 44 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய பழனி கோவில் இணை ஆணையர், பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் கம்பிகள் , உருளைகள், சாப்டுகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மலைக் கோவிலுக்கு, கிலினிக்காளர் வின்ச் என்று சொல்லக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் பழனி மலைக் கோவிலுக்கு கொண்டுவர சாத்தியக்கூறு உள்ளதா என முதல் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் வந்தால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எளிதில் மலைக் கோவிலுக்கு செல்ல முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications