ரூ 5 லட்சம், 60 பவுன் நகை மோசடி.. பிரளயம் வரும்னு சொன்ன மாடர்ன் பெண் சாமியார் ஸ்ரீபவித்ரா கைது
திண்டுக்கல்: கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக மாடர்ன் உடை அணிந்த பெண் சாமியார் பவித்ரா திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியில் வசித்து வருபவர் பபிதா என்ற பவித்ரா. இவர் தான் காளியின் அவதாரம் என கூறிக் கொள்கிறார்.
தனக்கு காளியின் பரிபூரண அருள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல் திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் விடுதியில் தான் காளி என்று கூறி தன்னிடம் ஆசி பெற்றுக் கொள்ளுமாறு விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரமம்
இதேபோல் பல்வேறு இடங்களில் இவ்வாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அருள் புரிவதாக கூறி நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம் கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 5.50 லட்சம் பணம் மற்றும் 60 சவரன் தங்க நகையை ஏமாற்றி பெற்றுள்ளார்.

6 மாதங்கள் தலைமறைவு
இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பவித்ராவை தேடி வந்தனர். கடந்த ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் பவித்ரா திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக நிலக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காவல் துறை
தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குரு வெங்கட் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா கோவில் தெருவில் அவரது வீட்டில் தங்கியிருந்த பவித்ராவையும் மற்றும் அவரது தங்கை ரூபாவதி ஆகிய இருவரையும் நிலக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை அழைத்துச் சென்றனர்.

திருவண்ணாமலையில் ஸ்ரீபவித்ரா
கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு வந்திருந்த ஸ்ரீபவித்ரா, மூன்று மாதத்தில் தமிழகத்தில் பிரளயம் ஏற்படும். திருவண்ணாமலையில் புண்ணிய பூமியில் என்னுடைய பாதம் பட்டதால் இங்கு இனி அதிசயம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications