என்னது தவெக ஆட்சியை பிடிக்கிறதா.. சிரஞ்சீவி கதை தெரியுமா.. செல்வப்பெருந்தகை தக் சம்பவம்
திண்டுக்கல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்று வாக்கு சதவீதத்துடன் முடிந்துள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் தவெக இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் தாக்கம், திமுக கூட்டணியின் பலம் உள்ளிட்ட கணக்கீட்டுடன் செல்வப்பெருந்தகை தடாலடி கருத்தை கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக ஆட்சியமைப்பது கனவில் வேண்டுமானால் நடக்கலாம். நிஜத்தில் அது நடக்காது. அவரை சுற்றியிருக்கிற ஆட்கள் அப்படி. நேற்று முளைத்த காளான்களால் தமிழகத்தை ஆள முடியாது.

திமுகவுக்கு 40 விழுக்காடு வாக்கு
தமிழகத்திற்கென்று கலை, கலாச்சாரம், பாரம்பரியம், இலக்கணம் இருக்கிறது. எல்லோரும் எம்ஜிஆர், என்டிஆர் ஆகிவிட முடியாது. இந்த தேர்தலில் அவர்கள் கணிசமான வாக்குகளை பெறலாம். கூட்டல், கழித்தல், மக்களின் மனநிலை, கட்சிவாரியான ஓட்டு வங்கி ஆகியவற்றை கழித்து பார்த்தால் உண்மை தெரியும். குறைந்தபட்சம் 40 விழுக்காடு வாக்கை திமுக கூட்டணி பெறும்.
நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. 46.65 விழுக்காடு என்று சர்வேயில் வந்தது. இந்த எண்ணிக்கையும் தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோர் இணைவதற்கு முன்பு தான். அதன் பிறகு பலர் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் எங்கள் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த 40 விழுக்காட்டை தொடுமளவுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் வாக்கு வங்கி கிடையாது.
விஜய்யால் முடியாது
எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகமாக தெரிகிறது. மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டனர். இந்த தீர்ப்பு மே 4 ஆம் தேதி வாசிக்கப்படும். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இதில் மாற்றுக் கருத்தில்லை. சில ராமானுஜர்கள், கணக்கு புலிகள், மேதாவிகள் வேறு மாதிரி கணக்கு போடலாம்.
200 தொகுதிகளுக்கு ஒன்று கூட குறையாது. விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட கூடாது. எம்ஜிஆர் நிறைய செய்துவிட்டுதான் அரசியலுக்கு வந்தார். சிரஞ்சீவி பிரஜா கட்சியை தொடங்கியபோது 18 சதவீதம் வாக்கு வங்கியுடன், சில தொகுதிகளை வென்றும் அவரால் கட்சியை நடத்த முடியவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரே மீண்டும் நடிக்க சென்று விட்டார்"
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications