தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி.. இத்தனை சீர்வரிசையா? அத்தைகள் கொடுத்த சர்ப்ரைஸ்..ஊரே மிரண்டுருச்சு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பாரம்பரிய முறையை பின்பற்றி டிராக்டர் வண்டியில் 1008 சீர்வரிசைகள், பண மாலை, ஆட்டுக்கிடா என ஊரே திரும்பி பார்க்கும் அளவிற்கு தாய்மாமன் சீர் பெரிதா? அத்த மகன் சீர் பெரிதா? என போட்டி போட்டு சீர்வரிசைகளை காதணி விழாவுக்காக குவித்து ஊரையே மிரள வைத்துள்ளனர் உறவினர்கள். வண்டி நிறைய சீர்வரிசைகளுடன் வந்த வண்டிகளை பார்த்து அதிசயித்து போயினர் கிராம மக்கள்..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் இருந்தாலும் தென் மாவட்டங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது தாய்மாமன் சீர்வரிசை. தாய்க்கு பிறகு ஒரு குழந்தைக்கு வரும் முக்கியமான உறவு தான் தாய்மாமன் உறவு..

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதன் இறுதிக்காலம் வரை தாய்மாமன் இல்லாமல் எந்த நிகழ்வுகளும் நடைபெறாது. தென்மாவட்டங்களின் உயிர்நாடியான தாய்மாமன் சீர்வரிசையும் அப்படித்தான்.. காதுகுத்து பூப்புனித நீராட்டு விழா திருமணம் உள்ளிட்டவற்றில் தாய்மாமன் சீர்வரிசை இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நிறைவடையாது.
அந்த வகையில் திண்டுக்கல்லில் தனது தங்கையின் மகனுக்கு நடைபெற்ற புது நன்மை விழாவில் டிராக்டர்களில் சீர் கொண்டு வந்து தாய்மாமன் அசத்தியுள்ளார். அவருக்கு போட்டியாக அத்தைகள் வண்டி வண்டியாய் சீர்வரிசைகளை குவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் சபரி பாண்டி, சர்மிளா இவர்களது மகன் சித்தேஷ் இவருடைய காதணி விழா பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு தாடிக்கொம்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காதணி விழாவிற்கு தாய்மாமன்கள் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், சாரட் வண்டி, மற்றும் பண்டையகால வழக்கப்படியும், விவசாயிகளின் உற்றத் துனைவனாக இருக்கக்கூடிய டிராக்டர் வண்டியில் அரிசி மூட்டைகள், பழ வகைகள், வாழைத்தார்கள், சாக்லேட் வகைகள், புதிய ஆடைகள், விளையாட்டு சாமான்கள் பத்துக்கும் மேற்பட்ட தாய்மாமனின் சீதனமான ஆட்டு கிடா என 1008 சீர் வரிசைகளைக் கொண்டு வானவேடிக்கைகளுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அதேசமயம். தாய்மாமன் சீருக்கு சற்றும் சளைத்தவர்கள் அத்தை மகன்கள் அல்ல என அவர்களும் தப்பாட்டம், ஆட்டுக்கடா, சீர்வரிசைகள், வானவேடிக்கைகள் என பதிலுக்கு அவர்களும் சீர் கொண்டு வந்தனர். இதனால் தாடிக்கொம்பு கிராமமே தாய்மாமனின் உறவை மேம்படுத்தும் விதமாகவும், அத்தை மகன்களின் உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் போட்டி போட்டுக் கொண்டு சீர்வரிசைகளை கொண்டு சென்றதை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

விழாவின் சிறுவன் தாய் மாமன்களின் பணமாலை மற்றும் சாக்லேட் மாலை, ரோஸ் மாலை, ரோஸ் இதழ் மாலை, தாழம்பூ மாலை, தாமரைப்பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டார். வரும் நாகரீக காலங்களில் வீட்டு விசேஷங்கள் என்பது குறிப்பிட்ட நபர்களை அழைத்து காதும் காதும் வைத்தது போல் நடைபெறக்கூடிய சடங்கு சம்பிரதாயமாக மாறி வரக்கூடிய சூழ்நிலையில் நம் முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய தாய்மாமன் சீர்வரிசை என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் தாய்மாமன் சீர்வரிசை முன்பு எப்படி நடைபெற்றது என்பதை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், புதிய கலாச்சாரங்கள் பழைய வழிமுறைகளை மறந்துவிடக்கூடாது அவர்களும் நம்மைப் பார்த்து பழங்கால வழிமுறைகளை அழிந்து விடாமல் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தக் காதணி திருவிழாவானது நடைபெற்றது என கூறினர் விழாவில் சீர் கொண்டு வந்த தாய் மாமன்கள்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications