நிர்வாண வீடியோ கால்! ஏடாகூடமாய் சிக்கிய இளைஞர்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்! திண்டுக்கல்லில் பரபர
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 30 வயது பெண்மணியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளைஞர். இவர் சமீபத்தில்தான் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். வெளியில் சென்று வேறு ஒருவரிடம் வேலை செய்வதைவிட சொந்தமாக தொழில் செய்வதே சிறந்தது எண்ணிய அவர் தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்திருக்கிறார். அவரும் மகனின் விருப்பத்தின் பேரில் செருப்புக்கடை ஒன்றை வைத்துக்கொடுத்திருக்கிறார். படிப்பு.. அது முடித்தவுடன் கைமேல் வருமானம் வருவதற்காக ஒரு சொந்த தொழில் என இளைஞர் பிரச்னையின்றி தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார்.
ஆனால், இடையில் செல்போன் மூலம் பஞ்சாயத்து தொடங்கியுள்ளது. அதாவது இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடமிருந்து செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பை எடுத்து பேசியபோது அது 'ராங் கால்' என்று கூறி கட் செய்திருக்கிறார். இதன் பின்னர் மீண்டும் அதே நம்பரிலிருந்து அழைப்பு வரவே தொடர்ந்து பேசலாம் என்று பேச தொடங்கியுள்ளார். இதனையடுத்து சில நாட்கள் செல்போனும் கையுமாக திரிந்துக்கொண்டிருக்கிறார்.

ராங் கால்
இதனை கண்ட இவரது தந்தையும், சரி வயசு பையன்தானே என்று நினைத்து எதையும் கேட்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இளைஞருக்கும் அப்பெண்மணிக்கும் இடையேயான உரையாடல் தொடர்ந்திருக்கிறது. உரையாடல் வாட்ஸ் அப் சேட்-ஆகவும், வீடியோ காலாகவும் மாறியிருக்கிறது. இளைஞரும் தனது விருப்பதை அப்பெணிடம் வெளிப்படுத்த அப்பெண்ணும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் பேசியிருக்கிறார். இளைஞருக்கு அப்பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. தன்னுடைய அனைத்து தனிப்பட்ட விஷயங்களையும் அப்பெணிடம் இஞைர் ஷேர் செய்திருக்கிறார். ஆனால் அப்பெண் பெரியதாக எதையும் வெளிப்படையாக பேசவேயில்லை.

சந்தேகம்
இது இளைஞருக்கு லைட்டான சந்தேகத்தை கிளப்ப பெரியதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இப்படியே இருக்கும் நிலையில் நேரில் சந்திக்கலாம் என்று இளைஞர் கேட்டிருக்கிறார். அப்பெண் 'இப்போ வேணாம். இன்னொரு நாள் பாக்கலாம்' என கூறியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் நேரில் சந்திக்கலாம் என்று இளைஞர் கூறவும் அப்பெண் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த சந்திப்பை தள்ளி போட்டுவிடுவார். இதனால் சலிப்படைந்த இளைஞர் நாளடைவில் அப்பெண்ணிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அப்பெண் தினமும் ஃபோன் செய்ய இளைஞர் அவரை சுத்தமாக கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்.

வீடியோ கால்
இதன் பின்னர்தான் ஆட்டம் தொடங்கியிருக்கிறது. அதாவது இதுவரை தன்னிடம் பேசிய அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருந்த அந்த பெண் அந்த ரெக்கார்டை இளைஞருக்கு அனுப்பி "ஒழுங்கா பணம் தரயா? இல்ல உங்க வீட்டுல இந்த கால் ரெக்கார்ட், வீடியோ கால் ரெக்கார்டை கொடுக்கவா?" என மிரட்டியிருக்கிறார். இளைஞர் பணத்தை கொடுக்க முடியாது என கறாராக இருக்க அப்பெண் தொடர்ந்து அனைத்து வீடியோக்ககளையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இளைஞர் அசரவில்லை. இதனையடுத்து இளைஞரின் நண்பர்களை வைத்து ப்ளான் செய்துள்ளார் அப்பெண்மணி.

கடத்தல்
அதாவது இளைஞரின் நண்பர்கள் மூவரிடம் விஷயத்தை கூறி சம்பந்தப்பட் இளைஞரிடம் பணத்தை பெற்று தருமாறு கேட்டிருக்கிறார். இதனையடுத்து மூவரும் சேர்ந்து இளைஞரை கடத்தி அவருடை தந்தைக்கு போன் செய்து மிரட்டி ரூ.1.10 லட்சத்தை வாங்கியுள்ளனர். பின்னர் இளைஞரை விடுவித்துள்ளனர். இது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் இளைஞரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து காவல்துறையினர் இளைஞர் மூவரையும் கைது செய்துள்ளது. மேலும் 30 வயது மதிக்கதக்க அந்த பெண்மணியையும் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

கைது
"இந்த பெண்மணிக்கும் இளைஞரின் நண்பர் மூவருக்கும் ஏற்கனெவே பழக்கம் இருந்திருக்கிறது. எனவே இளைஞரை ஏமாற்றவே இவ்வாறு திட்டமிட்டு ஹனி ட்ராப் செய்திருக்கிறார்கள். தற்போது அப்பெண்மணியை தீவிரமாக தேடி வருகிறோம்" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications