நீங்க கட்சியிலேயே இல்லையே! பிறகெப்படி கூட்டம் நடத்தலாம்? திண்டுக்கல் காங்கிரஸ் Ex நிர்வாகிக்கு செக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த அப்துல்கனி ராஜா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள எச்சரிக்கை வருமாறு;

''திண்டுக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு எஸ். அப்துல் கனி ராஜா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
தற்போது திரு அப்துல் கனி ராஜா அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 26.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அந்த கூட்டம் கூட்டுவதற்கு தார்மீக அடிப்படையில் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.
இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சி விதிமுறைகளுக்கு முரணாக கூட்டப்படுகின்ற கூட்டம். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக்கூடாது. அப்படி கூட்டத்தில் பங்கேற்றால் அது கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் இறுதி முடிவிற்கு பிறகே திரு அப்துல் கனி ராஜா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனவே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் திரு அப்துல் கனி ராஜா நடத்துகின்ற கூட்டத்தில் பங்கேற்கவோ, அவருடன் கட்சி சம்பந்தமாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவோ கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்துகிறது.'' இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications