ஆடிய ஆட்டமென்ன.. கோபுரத்தில் இருந்த தக்காளி.. இப்போ குப்பையிலே கிடக்கு! கண்ணீர் விடும் விவசாயிகள்!
திண்டுக்கல்: கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் காலகட்டத்தில் 100 ரூபாய் வரை விற்பனையான தக்காளி விலை தற்போது அதலபாதாளத்திற்கு சரிந்து இருக்கிறது. ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை. பறிப்பு கூலிக்கு கூட கட்டாததால் விவசாயிகள் அவற்றை செடியிலேயே விட்டு கால்நடைகளுக்கு தீவனம் ஆக்கி வருகின்றனர். மாதக்கணக்கில் பராமரித்த தக்காளிப் பழங்கள் அழுகிப்போய் கிடப்பதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.
ஒரு சீசனில் ஒரு காய்கறியின் விலை சரிவை சந்திப்பதும் மற்றொரு காய்கறியின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். மழைக் காலங்களில் தக்காளியின் விலை ஆனது மிகக் கடுமையாக அதிகரிக்கும். மழை காரணமாக தக்காளி செடியிலேயே அழுகி விடுவதால் மிகக் குறைந்த அளவே மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து இருக்கும்.
இதனால் தக்காளியின் விலை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தக்காளியின் விலை வெகுவாக அதிகரிக்கும். கடந்த ஆண்டுகளில் 150 ரூபாய் வரை கூட தக்காளி மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனையானது.

தக்காளி விலை சரிவு
வெளிச்சந்தைகளில் 170 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையின் தாக்கம் குறைந்து இருக்கும் நிலையில் வெயில் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாததால் தக்காளி விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.
விளைச்சல் இழப்பு
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விளையும் தக்காளி மொத்த மார்க்கெட்டுகளுக்கு விற்கப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது அதிக அளவில் தக்காளி விளைச்சல் இருப்பதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் விலை மிகக் கடுமையாக சரிந்திருக்கிறது.
தமிழக அரசு
குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், அய்யலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக் கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும் உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருகின்றனர். மேலும், தக்காளி விலையை நிலைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காய்கறி விலை வீழ்ச்சி
ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய குறைந்தது ரூ.10 செலவாகிறது. தக்காளி அறுவடை, போக்குவரத்து செலவு ஆகியவற்றுடன் லாபமும் சேர்த்து குறைந்தது ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு கொள்முதல் செய்யப்பட்டால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், தக்காளி நல்ல விளைச்சல் ஈட்டும் போது கிலோ ரூ.10க்கு கூட வாங்கப்படுவதில்லை. தக்காளியின் விலை வெகுவாக சரிந்துள்ளதால் அதனை பறிக்க வரும் கூலித் தொழிலாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாததால் அவற்றை சில விவசாயிகள் செடியிலேயே விட்டு கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர். சிலரோ அதனை பறித்து குப்பையில் கொட்டி வருகின்றனர்.
குறைந்தபட்ச விலை
அதிக அளவில் தக்காளி மாடுகளுக்கு கொட்டப்படுவதால் அவற்றை தீவனமாக கூட கால்நடைகள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் வயல்வெளிகளில் தக்காளி குப்பை போல கொட்டப்பட்டு அழுகி கிடக்கிறது. ஆயிர கணக்கில் செலவு செய்து வாரக் கணக்கில் காப்பாற்றிய செடிகள் காய்ந்து போய் தக்காளிப் பழங்கள் அழுகிப் போய் கிடப்பதால் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள். இது தொடர்பாக தமிழக அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப் போல காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications