Vijay trisha issue: எப்படி மட்டம் தட்டி பேசலாம்..நயினார் செங்கோட்டையனுக்கு குறைந்தவர் அல்ல! திண்டுக்கல்லார் திடீர் ஆதரவு
திண்டுக்கல்: செங்கோட்டையன் மட்டம் தட்டி பேசி இருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தான்தோன்றி தனமாக பேசக்கூடாது எனவும், வயதைத் தவிர எந்த ஒரு விதத்திலும் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையனுக்கு குறைந்தவர் அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் ஒரு ஆளா? பிஜேபி ஒரு கட்சியா? என பேசியுள்ளர்.
தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் வயது சிறியவராக இருக்கலாம். ஆனால் அமைச்சராக இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து பிஜேபி நம்பர் ஒன்றாக தமிழ்நாட்டில் தலைவராக இருந்து வருகிறார்.

திரிஷா விஜய் விவகாரம்
என்ன காரணத்திற்காக அவர் ஒரு ஆளா? அது ஒரு கட்சியை என கேட்கிறார். நிர்மலா சீதாராமன் அமித்ஷா ஆகியோரை தேடி ஏன் சென்றார். மூன்று முறை காங்கிரசை வீழ்த்தி பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். உலக நாடுகளை எதிர்பார்க்கிற அளவுக்கு அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து. இந்தியா நடுநிலையான நாடு என்று பெயர் எடுத்திருக்கின்ற பிஜேபி தான் பெருமை என்ற நிலையில் இருந்து வருகிறது.
செங்கோட்டையன் மட்டம் தட்டி பேசி இருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தான்தோன்றி தனமாக பேசக்கூடாது. வயதைத் தவிர எந்த ஒரு விதத்திலும் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையனுக்கு குறைந்தவர் அல்ல.
திண்டுக்கல் சீனிவாசன்
இன்று வள்ளலாரை பார்க்க சென்றதால் வள்ளலார் ஆட்சி என தெரிவித்துள்ளார். வஉசி இடம் சென்றார் அவரது ஆட்சி என கூறுவார். பள்ளிவாசல் சென்றால் அல்லாவின் ஆட்சி எனக் கூறுவார். சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்றார்போல் பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தலில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரியும். சசிகலா பசும்பொன்னில் கூட்டம் நடத்துவது, தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்த தகவல் என்று கூறுகிறீர்கள். அனைத்து செய்திகளிலும் வர வேண்டும். குழந்தை பிறக்கட்டும் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று பார்த்துவிட்டு பெயர் வைப்போம். அதுவரை No Comments.
தவெக விஜய்
கரூர் சமபவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர் அதிலிருந்து 70 கிலோமீட்டர் தாண்டி உள்ள சேலத்தில் பேசினார். 72 நாட்கள் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளியே வரவில்லை. கரூரில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் கொடுத்த தொகை மிகவும் குறைவானது. இறந்த மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும். நேற்று இறந்தவருக்கு பிச்சை காசு ரூபாய் 5 லட்சம் கொடுத்து இருக்கிறார் என்று சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஸ்டாலின்
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு என்ன தொகை கொடுக்கப்பட்டதோ அதே கொடுக்க வேண்டும். நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து பேசி குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இது பொதுமக்களின் நியாயமான கருத்து அதனை செய்ய வேண்டும். இந்த நேரம் அரசாங்கம் நிவாரணம் அறிவித்திருக்க வேண்டும். அரசாங்கமும் அறிவிக்கவில்லை. இதற்கு ஸ்டாலின் நிவாரணம் அறிவிக்காதது ஏன் என தெரியவில்லை. எது நடந்தாலும் பேசவும் மாட்டிக்கிறார்கள், வரவும் மாட்டிக்கிறார்கள் அதனாலே கோடிக்கணக்கில் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறேன்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மட்டும் அல்லாமல் ஜெயலலிதா புகைப்படங்களையும் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் அவர்களை மறந்து விட்டனர் என்று கூறுகின்றனர். அந்த மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை. அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் புகைப்படம் இல்லாமல் இல்லை. அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்கள். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசியல் பயணத்திற்காக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை பயன்படுத்துகின்றார். விஜய் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்த முடியுமா? என கேட்கிறார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை விஜய் பயன்படுத்தக்கூடாது.
செங்கோட்டையன்
எங்களது தொண்டர்களை அனுதாபம் மூலம் விஜய் தனது கட்சிக்கு இழுக்கலாம் என்பது பகல் கனவு. செங்கோட்டையன் போல சிலர் சென்றிருக்கலாம் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்கு உரியவர்கள். தமிழ்நாட்டில் பிசினஸ் ஆரம்பிக்க வந்த விஜய்க்கு அவருக்கு பொருத்தமாகாது. அவர்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. தவெக 30% வாக்கு உள்ளது என்று விஜய் பேசியுள்ளார்.
விஜய்
அதிமுக, திமுக வாக்கு சதவீதம் எந்த விதத்திலும் குறையவில்லை. 32 வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்டது அதிமுக. அதற்குப் பின்பு ஆண்டு கொண்டிருப்பது திமுக. என்ன சக்தி உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். விஜய் கையை மூடி வைத்துள்ளார். திறந்தால் கையில் ஒன்றும் இல்லை. தேர்தலில் நின்று மக்களின் அன்பை பெற்று அவர்களுக்கு என்ன ஓட்டு வந்துள்ளது என்று கூறினால் நம்பலாம். விஜய் கூட உள்ள கைத்தடிகள் 50% என்று கூறலாம்.












Click it and Unblock the Notifications