Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பத்தினி".. குறி கேட்டு குறி வைத்த விஜயசாந்தி.. "கண்ணால காட்டு".. குளத்துக்கரையில் பகீர் வீடியோகால்

கணவரை கொன்ற மனைவி, மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சாயங்காலம் குளத்துக்கரையில் நடந்த அக்கிரமத்தை பார்த்து வேடசந்தூர் அலறி கிடக்கிறது.. இது தொடர்பாக 2 பேர் கைதாகி கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்... 33 வயதாகிறது.. வேடசந்தூரில் உள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்..

மனைவி பெயர் விஜயசாந்தி.. இவர்களுக்கு பிரதாப் (6) என்ற மகனும், தியா 3 வயது மகளும் உள்ளனர். 2 நாளைக்கு முன்பு, நைட் வெளியே சென்ற நவீன் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.. இதனால், அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்..

குளத்துக்கரை

குளத்துக்கரை

நவீன்குமார் எங்கேயும் இல்லை.. மறுநாள் நேற்றுமுன்தினம் காலை கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் நவீன் சடலமாக கிடந்தார்.. கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.. உடம்பெல்லாம் ரத்தம் வழிந்தோடி கொண்டிருந்தது.. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... விசாரணையையும் துவங்கினர்.. அந்த குளத்துக்கரையில் நிறைய மதுபாட்டில்கள் விழுந்து கிடந்தன.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நவீன் தீர்த்து கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினர்...

புதருக்குள்ளே

புதருக்குள்ளே

ஆனால், அதுக்குள்ளேயே., விஜயசாந்தியின் சுறுசுறுப்பும், கேஷூவல் நடவடிக்கையும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றாலும் அவரை எதுவுமே விசாரிக்கவில்லை.. அமைதியாகவே விஜயசாந்தியை கண்காணித்தனர்.. மற்றொருபக்கம் அவரது செல்போனை டிரேஸ் செய்தனர்.. விஜயசாந்தி யார், யாரிடம் பேசியிருக்கிறார் என்ற விவரத்தை சேகரித்தனர்... அப்போதுதான் சிவா என்பவர் சிக்கினார்.. 31 வயதாகிறது.. ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சிவா.. பழனிச்சாமி என்பது ஒரிஜினல் பெயர் ஆனால், ஸ்டைலாக சிவா என்று மாற்றி வைத்து கொண்டார்..

"குறி"

விஜயசாந்தியும் சிவாவும் தினமும் போனில் பேசி வந்துள்ளனர்.. அதில் இருந்த மெசேஜ்களை வைத்து, இவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்ததும் உறுதியானது.. இதற்கு பிறகுதான் விஜயசாந்தியிடம் விசாரணையே ஆரம்பமானது.. வசமாக சிக்கி கொண்ட நிலையில், வேறு வழியில்லாமல் அனைத்தையும் ஒன்றுவிடாமல் விஜயசாந்தி சொல்லிவிட்டார்.. "நான் கல்யாணத்துக்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தேன்.. அப்போது நவீனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்தது... 6 வருடங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டோம்.. நாளடைவில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வெடித்தது.. நான் கோபித்துகொண்டு என் குழந்தைகளுடன், அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

 த்ரில்லர்

த்ரில்லர்

2 வருடங்களாகவே நாங்கள் பிரிந்துதான் இருந்தோம்.. குடும்ப பிரச்னைக்கு தீர்வுகாணலாம் என்று நினைத்தேன்.. அதற்காக குறி கேட்க முடிவு செய்தேன்.. சிவா என்பவர்தான் குறி சொன்னார்.. சேணன்கோட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குறி சொல்லி வந்தார்.. அப்போதுதான் எனக்கும், சிவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலானது.. குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண, நவீனை அழைத்து கொண்டு சிவாவிடம் சென்று குறி கேட்டேன்.. 2 வாரங்களுக்கு முன்புதான், நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து வாழ்ந்தோம்... ஆனாலும் சிவாவை என்னால் மறக்க முடியவில்லை..

டேன்ஞ்சர்

டேன்ஞ்சர்

சிவாவுக்கும் என்னை பிரிந்து இருக்க முடியவில்லை.. அதனால், 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். 2 நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டுக்கு சிவா வந்தார். அப்போது எங்கள் கள்ளக்காதல் விவகாரம், நவீனுக்கு தெரிந்துவிட்டது.. என்னை கண்டித்தார்.. இது, எனக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்... நவீனை கொன்றுவிடுமாறு சிவாவிடம் நான்தான் சொன்னேன்.. கொன்றுவிட்டால் ஜாலியாக வாழலாம் என்று சொன்னதும், சிவாவும் சம்மதம் கூறினார். அதன்படி, நாள் குறித்தோம்.. சம்பவத்தன்று சாயங்காலம் சிவா பைக்கில் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

 புருஷன்

புருஷன்

நவீனிடம் தண்ணி அடிக்கலாம் என்று அழைத்து சென்றார்... நவீனும் சிவாவும் பைக்கில் கிளம்பி கோடாங்கிபட்டி குளக்கரைக்கு சென்றார்கள்.. நானும் பின்னாடியே சென்றேன்.. 2 பேரும் சேர்ந்து மதுபானம் குடித்தனர். நவீனுக்கு போதை அதிகமானது.. அந்த நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆட்டை அறுப்பதை போல கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பிறகு சிவா தலைமறைவாகி விட்டார்... நானும் எதுவும் தெரியாததை போல வீட்டில் வந்து இருந்து விட்டேன். குளத்துக்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றேன்.. என் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக என்னுடைய கணவர் உடலை பார்த்து கதறி கதறி அழுதேன்.. 'எந்த பாவியோ என் புருஷனை கொன்னுட்டானே என்று பத்தினி போல் வேஷம் போட்டு அழுதேன்" என்றார்.

குளத்துக்கரை

குளத்துக்கரை

இதையடுத்து, விஜயசாந்தி மற்றும் தலைமறைவாகி இருந்த மந்திரவாதி சிவாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. சிவாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்... இந்த குறி தொழிலை செய்து வந்தவர்.. விஜயசாந்தியை பார்ப்பதற்காகவே அந்த தொழிலை விட்டுவிட்டு, வேடசந்தூருக்கு வந்து மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தாராம்.. இதை பார்த்துதான், விஜயசாந்திக்கு சிவா மீது கள்ளக்காதல் அதிகமாகிவிட்டதாம்.. விஜயசாந்தியும், சிவாவும் டூவீலரில் அந்த பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்துள்ளதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.. அதை நவீனிடமும் சொல்லி உள்ளனர்..

 வீடியோ கால்

வீடியோ கால்

அதற்குபிறகுதான் இந்த ஜோடியை கண்டித்துள்ளார்.. அவர்கள் நவீன் பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இதில் இன்னொரு கொடுமையும் நடந்துள்ளது.. காட்டுப்பகுதியில் நவீனின் கழுத்தை அறுத்ததுமே விஜயசாந்திக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாராம் சிவா.. "இத்துடன் கதை முடிந்தது.. இனி நமக்கு பிரச்சனை இல்லை" என்றாராம்.. அதற்கு விஜயசாந்தி, நான் நம்பமாட்டேன், வீடியோவில் காட்டு என்றாராம்.. பிறகு, கழுத்து துண்டாகி ரத்தம் வழிந்தநிலையில் கிடந்த சடலத்தை வீடியோகாலில் காட்டினாராம். சடலத்தை பார்த்ததுமே அதை ரசித்து நிம்மதியானாராம் விஜயசாந்தி..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+