கொளுத்தும் வெயிலில் மயங்கி விழுந்து பெண் பலி.. திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வெயிலில் மயங்கி விழுந்து பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக, உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடுவோர் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். வெயில் கொடுமை, உடல் நலக் கோளாறுகள் தொடங்கி உயிரிழப்பு வரை ஆபத்தை ஏற்படுத்துகிறது.

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்த ஜோஸ்பின் மேரி என்ற பெண் பலியாகியுள்ளார். வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஜோஸ்பின் மேரி உடலை, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடுமையான வெயிலில் பெண் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் சுமார் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தி உள்ளது. கரூர் பரமத்தியில் 105, சேலம், வேலூர், தருமபுரியில் 104, திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெயிலில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப் படுகிறது.
-
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications