அபார்ஷன்.. நழுவிய காதல் கணவன்.. விரட்டி கொண்டு வந்த இளம்பெண்.. எஸ்.பி ஆபீஸ் முன்.. பரபர திண்டுக்கல்
காதலனை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்
திண்டுக்கல்: கர்ப்பமாக்கிவிட்டு, ஏமாற்றி விட்டுச் சென்ற, காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஆபீசில் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா... இவர் மகுடீஸ்வரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்..
திண்டுக்கல் ஐடிஐயில் படிக்கும்போது மகுடீஸ்வரனும் கௌசல்யாவுடன் ஒன்றாக சேர்ந்து படித்துள்ளார்.. அப்போது இருவருமே தீவிரமாக காதலிக்க துவங்கி உள்ளனர்.

சென்னை
படிப்பு முடிந்ததும் இருவரும் சென்னைக்கு வேலைக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.. ஆளுக்கு ஒரு பக்கம் வீடு எடுத்து தங்கி, வேலைக்கும் சென்று வந்திருக்கிறார்கள்.. ஒருநாள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செய்து கொண்டனர். பிறகு ஒரே வீட்டில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.. கௌசல்யா கர்ப்பமானார்.. இதையடுத்து 2 பேரும் திண்டுக்கலுக்கு வந்து சேர்ந்துள்ளனர்..

அபார்ஷன்
செக்கப் செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கௌசல்யாவை அழைத்து சென்றுள்ளார் மகுடீஸ்வரன்.. ஆனால், கௌசல்யாவுக்கு தெரியாமல், அவரது அனுமதியும் இல்லாமல் அவருக்கு அபார்ஷன் செய்துவிட்டதாக கூறப்படுகிறது... அதன்பிறகு கௌசல்யாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம் மகுடீஸ்வரன். இதனால் அதிர்ச்சி அடைந்த கௌசல்யா, மகுடீஸ்வரன் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்..

அவதூறு
அதற்கு அந்த குடும்பத்தினர், கௌசல்யாவை அவதூறாக பேசியதுடன், இருகுடும்பமும் வேறு வேறு சமூகம் என்பதால் ஒத்து வராது என்று சொல்லி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். எனவே, கௌசல்யா வேறு வழியில்லாமல், ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. ஆனால், அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கவிலலை என்று கூறப்படுகிறது.. அதனால் மேலும் ஆத்திரமடைந்த கௌசல்யா, குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஆபீசுக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டார்..

நடவடிக்கை
மனு தந்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டரை கண்டித்தும், காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் முழக்கமிட்டார்.. ஒட்டுமொத்த குடும்பமும் எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.. இறுதியில் எஸ்பி சீனிவாசனிடம் கௌசல்யா மனு அளிக்கவும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்து அனுப்பி வைத்தார் மாவட்ட எஸ்பி.. !
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications