4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞனுக்கு ஆயுள் விதிக்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 4 வயது குழந்தையை நாசம் செய்து கொன்ற இளைஞனுக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட் ஆயுள் தண்டனையை அளித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி நடந்த சம்பவம் இது: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் கொம்பேறிபட்டியை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தாள்.

Youth got Life sentence for 4 year old girl harassment and murdered case

சம்பவத்தன்று பாட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தையை, அவரது பாட்டி ரேசன் கடைக்கு அழைத்து சென்றார். எதிரே அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் என்ற 17 வயது சிறுவன் பைக்கில் வரவும், குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுமாறு பாட்டி சொன்னார்.

இதனால் குழந்தையை பைக்கில் ஏற்றி சென்ற அந்த சிறுவன், அங்கன்வாடி மையத்தில் விடாமல் கிணத்துபட்டி அருகே உள்ள மலைபகுதிக்கு அழைத்துசென்று சிறுமியை சீரழித்து கொன்றுள்ளான்.

பிறகு, அவள் அணிந்திருந்த தோடு, கொலுசு போன்றவற்றை எடுத்துகொண்டு குழந்தையின் சடலம் மீது கற்களை அடுக்கி வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். குழந்தையை காணாமல் பெற்றோரும், உறவினர்களும் தேட துவங்கினர்.

பின்னர் அய்யலூரில் சுற்றி கொண்டிருந்த ராம்குமாரை பிடித்து விசாரித்தபோதுதான், பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. விஷயம் வடமதுரை போலீசுக்கு போனதும், விரைந்து சென்று கற்களை அகற்றி சிறுமியின் உடலை கைப்பற்றி, ராஜ்குமாரையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இதன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. சிறுமியை கற்பழித்து கொலை செய்த ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+