கையில் கஞ்சா.. மயக்கத்தில் மட்டை! 2கே கிட்ஸ்-ன் ரீல்ஸ் வேற.. இப்ப என்ன ஆச்சுனா ப்ரண்ட்ஸ்? பரபர பழனி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பார்க் ஒன்றில் கஞ்சா புகைத்து மட்டையாவது எப்படி என கெத்தாக ரீல்ஸ் போட்ட 2 கே கிட்ஸ்களை கொத்தாகத் தூக்கியுள்ளனர் பழனி போலீசார். பிடிபட்டவர்கள் கையில் கஞ்சா சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது என விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

டிக்-டாக் வந்த பிறகு திடீர் செலிப்ரிட்டிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஜிபி முத்து, திருச்சி சாதனா போன்றவர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என பலரும் பாராட்டிய நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அது ஆபாசமாக மாறத் தொடங்கியது.
இதையடுத்து பல நிறுவனங்கள் அதாவது பேஸ்புக் போன்றவையே சார்ட் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கின. இதையடுத்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க சட்டவிரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.
பைக்குகளில் ஸ்டண்ட் செய்வது, பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது என போய் , தற்போது கஞ்சா புகைப்பது குறித்து டெமோ காட்டும் அளவுக்கு வந்துள்ளது. அப்படி பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரிலீஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததோடு, தலைமறைவான கஞ்சா வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளனர்.
இப்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வாட்சப், பேஸ்புக்கில் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இணையத்தில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரியை போலீஸார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் கஞ்சா ரீல்ஸ் தொடர்பாக பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய Bong (புகையிலை உறிஞ்சி). கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன் , மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாலசமுத்திரத்தை சோந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக கள்ளச் சந்தை மது விற்பனைக்கு திண்டுக்கல் முழுவதும் தடை விதிக்கப்பட்டு கட்டுப்பாடாக இருக்கும் நிலையில், கஞ்சா வியாபாரத்தை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications