‘புஷ்பா’ பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்.. விறுவிறு சேஸிங் - சிக்கிய கடத்தல் மன்னனான திமுக புள்ளி!
சித்தூர் : ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற வாகனங்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செம்மர கடத்தல் மன்னனான திமுக பிரமுகர் பெருமாளை போலீசார் கைது செய்தனர். இவர் திமுக ஒன்றிய சேர்மனின் கணவர் ஆவார்.

அதிரடி சோதனை
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்ட எஸ்.பி நிஷாந்த்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சல்லடை போட்டு வாகனங்களை சோதனை செய்து வந்தனர்.

நிற்காமல் சென்ற வாகனங்கள்
திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் செர்லோபள்ளி எனும் இடத்துக்கு அருகில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் 3 கார்கள் நிற்காமல் சென்றுள்ளன. இதனால் சந்தேகமடைந்த ஆந்திர போலீசார் அந்த வாகனங்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.

செம்மரம் பறிமுதல்
போலீசார் தடுத்து நிறுத்திய அந்த வாகனங்களில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரம் கடத்தி வந்த 6 பேர் தப்பிய நிலையில் போளூரை சேர்ந்த பெருமாள் மற்றும் ஆரணியை சேர்ந்த வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக சேர்மனின் கணவர்
இதில் பெருமாள் என்பவர் மீது ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் 'புஷ்பா' திரைப்பட நாயகன் போல பல நூதன வழிகளில் செம்மரங்களை கடத்தி வரும் 'கடத்தல் மன்னன்' என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பெருமாளின் மனைவி சாந்தி, தி.மு.க போளூர் ஒன்றிய சேர்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடுதல் வேட்டை
செம்மரக் கட்டைகளுடன் 4 வாகனங்களையும் கைப்பற்றிய போலீசார், தப்பிச் சென்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சி, போளுரை சேர்ந்த பாலாஜி, கல் குப்பத்தை சேர்ந்த அஜித், போளூரை சேர்ந்த வினோத், சரத், சென்னையை சேர்ந்த ரமேஷ், குமார் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியானது.

கூட்டாக கடத்தல்
இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தி சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளிகளான நான்கு பேருக்கு கை மாற்றி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications