முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துபாயில் பிரம்மாண்ட வரவேற்பு! மாஸ் திட்டத்துடன் பரபரப்பான முன்னேற்பாடுகள்!
துபாய்: துபாய் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அங்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் அந்த சங்கத்தின் அமீரகத் தலைவரும், திமுக அயலக அணி நிர்வாகியுமான மீரான் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் துபாய் என்பதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியை பார்வையிடவும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையிலும் இம்மாதம் 26-ம் தேதி துபாய் புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 2 நாட்கள் தங்குகிறார்.
இவரது துபாய் வருகையை திருவிழா கோலம் போல் கொண்டாட முடிவெடுத்துள்ள திமுக அயலக அணியும், வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர் சங்கமும் அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துபாய் வரும் முதலமைச்சருக்கு பெரியளவில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளை கொண்டாடு வகையில் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். மேலும், தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றிபெற்றதால் அதையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல்வரை துபாயில் வரவேற்க கட்சியினர் மட்டுமல்லாமல் அங்கு பணியாற்றக் கூடிய தமிழர்களையும் பெருமளவில் திரட்டுவதற்கான பணிகளை திமுக அயலக அணி நிர்வாகி எஸ்.எஸ்.மீரானும் முக்கிய தொழிலதிபர்கள் சிலரும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications