ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்.. சென்னையில் இரவு நேர கார் ரேஸ் நடத்தியதால்!
துபாய்: இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் தெரிவித்துள்ளார். இரவு நேர ரேஸை நடத்தியது இந்தியாவின் கார் பந்தயங்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளதாக கூறிய அவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், முதல் சுற்றிலேயே வெற்றியை சுவைத்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் அஜித் குமார் ஓட்டுநராக களமிறங்கிய அணி வெற்றிபெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு ஸ்பிரிட் ஆஃப் தி மேன் விருது அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியக் கொடியுடன் அஜித் குமார் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள், பிரபலங்கள் என்று அனைத்து தரப்பினரும் அஜித் குமாருக்கு வாழ்த்து கூறினர்.
இதற்கு அஜித் குமாரும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சினிமாவில் இருந்து அடுத்த 9 மாதங்கள் விலகி இருக்க போவதாக அறிவித்த அஜித் குமார், அடுத்த ரேஸில் கலந்து கொள்வதற்கும் தயாராகி வருகிறார். இந்த நிலையில் தெற்கு ஐரோப்பிய சீரிஸ் 2025 கார் ரேஸ் தொடர் போர்ச்சுகலில் நடக்கவுள்ளது. இதற்கான பயிற்சியை அஜித் குமார் ரேஸிங் அணி தயாராகி வருகிறது.
இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஜித் குமார் அளித்த நேர்காணலில், சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தியது வரவேற்கத்தக்கது.
"History in the making! For the FIRST TIME, Ajith Kumar praises a government initiative! Kudos to the MK Stalin government for hosting Tamil Nadu's FIRST-EVER night race! #AjithKumar #MKStalin #NightRace #TamilNadu" pic.twitter.com/enYaalwvJQ
— Saran Raj (@Saran_Raj46) January 17, 2025
இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் தான் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் கார் பந்தய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. அதேபோல் எனக்கு ஆதரவளித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
துபாய் 24H கார் ரேஸின் போது அஜித் குமார் அணிந்திருந்த உடையில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது. அந்த முத்திரையை அஜித் குமார் வீடியோ ஒன்றில் பெருமையாக காட்டியதும் மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications