ஐக்கிய அமீரகத்தில் தமிழர்களுக்கான குறுநாடக விழா.. படைப்புகளை அனுப்ப டிசம்பர் 5 கடைசி நாள்!
துபாய் : ஐக்கிய அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்காக குறு நாடக விழா நடத்தப்படுகிறது. இதற்காக தமிழர்கள் தங்கள் படைப்புகளை டிசம்பர் 5ஆம் தேதி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல் கடந்து வாழும் போதும் கலை வளர்ப்பதிலும் அதை வெளிப்படுத்துவதிலும் மனிதனுக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஐக்கிய அரபு நாட்டில் வாழும் தமிழர்களின் எழுத்து இயக்கம் நடிப்பு திறனுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது 'குறுநாடக குழு'.

அமீரக குறு நாடக விழா'அமைப்பாளர்களும், அவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் கடந்த ஐந்து வருடங்களாக பங்கு பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களும், மேடை நாடகங்கள் மற்றும் குறும்படங்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
2016 முதல் வருடம் தோறும் மேடை நாடக வடிவில் அமீரகத்தில் நடந்து வந்த இவ்விழா கடந்த வருடம் போன்றே இவ்வருடமும் தற்கால சூழலுக்கு உட்பட்டு, 'குறும்பட விழா' வாக நடைபெறப்போகிறது. குறும்படங்களுக்கு கதை எழுத, இயக்க, நடிக்க, ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற முன் வர வேண்டும்.
இத்தகைய திறமைகள் பொருந்திய பல அமீரக தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அமைப்பாளர்கள் அன்புடன் அழைப்பு விடுகின்றனர். புதுமையும் சுவாரசியமும் நிறைந்த கதை களங்கள், நடிப்பு திறன், இசை, காட்சி வடிவமைப்பு, அனுபவம் வாய்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களின் தலைமை மற்றும் மதிப்பீடு, பெரும் நிறுவனங்களின் உறுதுணை இவை அனைத்தும் இவர்களது விழாவின் வெற்றிக்கான சிறப்பம்சங்களாகும்.

நாடக கலைஞர்கள் பத்திற்கும் மேற்பட்ட வகையில் எழுத்து, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங், திரை கதை வடிவம், ஒளிப்பதிவு, இவற்றில் பரிசுகள் பெற ஊக்குவிக்கப்படுவர். பங்கு பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசும் தரப்படும். மேலும் தகவல்களுக்கு பங்கேற்பாளர்கள் அமீரக குறு நாடக குழுவினரின் முக நூல் பக்கமான https://www.facebook.com/UAEKurunatagam/ நுழைந்தால் தெரிந்து கொள்ளலாம் என்றும், 2021 டிசம்பர் 5ம் தேதிக்குள் தங்களின் புத்தம் புதிய படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications