பிரஷர்.. கடைசி நொடி வரை திக் திக்.. பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது எப்படி? 5 பெரிய காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2022 ஆட்டம் நேற்று நடைபெற்றது. மிகவும் வலுவான அணியோடு களமிறங்கிய பாகிஸ்தான் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நேற்று கடுமையாக திணறியது.

147 ரன்கள் எடுத்த நிலையில் 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாபர் அசாம் 9 பந்தில் வெறும் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஃபகார் சாமானும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

ரிஸ்வான் மட்டும் கொஞ்சம் டீசண்ட்டாக (ஆனால் திணறி திணறி) 43 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இன்று பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இல்லை என்றாலும் ஹர்திக் பாண்டியா மிக சிறப்பாக பவுலிங் செய்தார்.

இதன்பின் இறங்கிய இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

நேற்று இந்திய அணியின் வெற்றிக்கு 5 முக்கியமான விஷயங்கள் காரணமாக இருந்தன.

காரணம் 1 - டாஸ் வென்றது

காரணம் 1 - டாஸ் வென்றது

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது இந்திய அணியின் டாஸ் வெற்றி. துபாய் பிட்ச் பொதுவாக இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக இங்கு பிட்ச் நேரம் செல்ல செல்ல ஈரம் ஆகும். பனி காரணமாக பந்தும் ஈரம் ஆகும். இதன் காரணமாக இங்கு இரண்டாவது பவுலிங் செய்வது கடினம். நேற்று இந்திய அணி டாஸ் வென்று சேசிங் தேர்வு செய்தது அணிக்கு சாதகமாக அமைந்தது.

 காரணம் 2 - அணி தேர்வு

காரணம் 2 - அணி தேர்வு

அதேபோல் அணி தேர்வும் இந்திய அணியில் சிறப்பாக இருந்தது. பும்ரா, ஷமி இல்லை என்பதால் இந்திய அணி பெரிதாக குழப்பிக்கொள்ளவில்லை. புவனேஷ்வர் குமார் தலைமையிலான பவுலிங் யூனிட் சிறப்பாக இருந்தது. 3 ஸ்பின் பவுலர்களுக்கு செல்லாமல் 1 புல் டைம் ஸ்பின்னர், 1 ஆல் ரவுண்டர் ஸ்பின் பவுலர் போதும் என்று இந்திய அணி முடிவு எடுத்தது. ஹர்டிக் பாண்டியா பவுலிங் செய்ததால் இந்திய அணிக்கு 4 பாஸ்ட் பவுலர்கள் ஆப்ஷன் இருந்தது. பாகிஸ்தான் அணியில் இதுதான் மிஸ்ஸானது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் ஸ்பின் பவுலரை பயன்படுத்தவும் இதுவே காரணமாக இருந்தது.

காரணம் 3 - பவுலிங்

காரணம் 3 - பவுலிங்

இந்திய அணியின் பவுலிங் யூனிட் மிக சிறப்பாக நேற்று ஆடியது. சாஹல் மட்டுமே கொஞ்சம் திணறினார். ஆனால் புவனேஷ்வர் குமார் பவர் பிளேவிலும், கடைசியில் டெத் ஓவர்களிலும் மிக சிறப்பாக வீசினார். அதேபோல் அர்ஷிதீப் சிங் இளம் வீரர் என்றாலும் கட்டுக்கோப்பாக ஆடினார். கடைசி ஓவரில் சிக்ஸ் கொடுத்த அடுத்த பாலே பக்கா யார்க்கர் போட்டு சிறப்பாக விக்கெட் எடுத்தார். அதேபோல் புவனேஷ்வர் குமாரும் முன்பெல்லாம் ரன் மட்டுமே கட்டுப்படுத்துவார், விக்கெட் எடுக்க மாட்டார். ஆனால் நேற்றைய போட்டியில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.

 காரணம் 4 - ஹர்திக் பாண்டியா

காரணம் 4 - ஹர்திக் பாண்டியா

இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது. ஒரு அணியின் வெற்றிக்கு பெரும்பாலும் ஆல் ரவுண்டர்தான் காரணமாக இருப்பார்கள். நேற்று ரிஸ்வான், இப்திகார், குஷ்தில் என்று 3 பெரிய விக்கெட்டுகளை எடுத்தார். டென்ஷனான நேரத்தில் மிகவும் கூலாக ஆடி 17 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று 33 ரன்கள் எடுத்தார். 194 ஸ்டிரைக் ரேட்டில் இவர் ஆடிய ஆட்டம்தான் நேற்று இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு வெற்றிபெற வைத்தது.

காரணம் 5 - கேப்டன்சி

காரணம் 5 - கேப்டன்சி

கடைசி விஷயம் என்றாலும்.. மிக முக்கியமான விஷயம் இந்திய அணியின் கேப்டன்சி. ரோஹித் சர்மா நேற்று கேப்டனாக சிறப்பான முடிவுகளை எடுத்தார். புவனேஷ்வர் குமார் நன்றாக வீசினால் அவரை மொத்தமாக பவர் பிளேவில் பயன்படுத்தாதது, பீல்டிங் செட்டப், ரிஸ்வானுக்கு தொடர்ந்து ஆப் சைடில் போட வைத்தது, பண்ட் இல்லை என்பதால் லெப்ட் ஹேண்டர் ஜடேஜாவை 4வது இடத்தில் களமிறக்கியது என்று ரோஹித் சர்மா எடுத்த முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+