அதிர்ஷ்டம் எப்படி அடிக்குது பாருங்க.. டக்குன்னு வந்த ஜடியா! லாட்டரியில் 33 கோடி அள்ளிய கேரள வாலிபர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரக்தின் அல் அய்ன் நகரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. தனது குழந்தைகளின் பிறந்த நாள் எண்ணில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்து இருப்பது அவருக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்துள்ளதாம்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இல்லை. எனினும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. தினமும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒரு பரிசும் வாரந்தோறும் ஒரு பரிசும் இதேபோல் விழா நாட்களில் பம்பர் பரிசும் என கேரளாவில் லாட்டரி விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

இதில், கேரளாவில் லாட்டரியில் அவ்வப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழுந்து திடீர் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். அண்மையில் கேரளாவில் சபரி மலை கோவிலுக்கு சென்ற பாண்டிச்சேரியை சேர்ந்த நபருக்கு கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் ரூ.25 கோடி பம்பர் பரிசு அடித்தது. சபரிமலைக்கு மாலை அணிவித்து சென்ற போது எதார்த்தமாக வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் தற்போது அந்த நபர் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
கோடிகளுக்கு சொந்தக்காரர்: இப்படி, ஒரே நாளில் அதிர்ஷ்டம் கைகொடுத்து வாழ்க்கையில் செட்டில் ஆக வைத்து விடுகிறது. கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி தமிழர்கள் பயனடைவது போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி வாங்கி இந்தியர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக சென்ற கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு "திண்ணைல் கிடந்தவனுக்கு திடுக்குனு அடித்ததாம் யோகம்" என்பது போல, அவர் வாங்கிய லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவ் அரிக்கத். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அய்ன் நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜீவ் அரிக்கத் அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கலில் அடிக்கடி கலந்து கொண்டு வந்தார். அப்படித்தான் கடந்த வாரத்தில் லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போடு அவர் தனது 5 மற்றும் 8 வயது குழந்தைகளின் பிறந்த நாள் எண்ணில் இந்த லாட்டரியை வாங்கியிருக்கிறார்.
இரட்டிப்பு மகிழ்ச்சி: இந்த நிலையில், அந்த லாட்டரி குலுக்கல் இன்று நடந்துள்ளது. இதில் ராஜீவ் அரிக்கத்திற்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் ஆகும். ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதிர்ஷ்ட மழையால் கோடிஸ்வரன் ஆகியுள்ள கேரள இளைஞர் தனக்கு எப்படி பரிசு கிடைத்தது பற்றி கூறியதாவது:-
எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசுத்தொகையினை நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் இதுவரை முடிவு செய்யவில்லை. எனினும் எனக்கு எப்போது துணையிருந்த எனது உற்ற நண்பர்கள் 19 பேருக்கு இந்த பணத்தின் ஒரு பகுதியை பகிர்ந்து கொடுக்க விரும்புகிறேன். குறிப்பாக எனது குழந்தைகளின் பிறந்த நாள் தேதியில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications