"எப்புட்றா.." இந்தியருக்கு அமீரகத்தில் அடித்த ஜாக்பாட்! இனி ஒவ்வொரு மாதமும் ரூ.5.5 லட்சம் கிடைக்கும்
துபாய்: துபாயில் பணிபுரியும் இந்தியக் கட்டிடக்கலை நிபுணர் ஒருவர், ஐக்கிய அமீரகத்தின் புதிய மெகா பரிசை அப்படியே அள்ளியுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5.5 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.
ஓவர் நைட்டில் வாழ்க்கை மாறிய பல கதைகளை நாம் கேட்டிருப்போம். அப்படித்தான் இங்கே வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியருக்கு மெகா லக் அடித்துள்ளது. அதாவது துபாய்க்குச் சென்று, அங்கே கட்டிடக்கலை நிபுணராக பணிபுரியும் இந்தியர் ஒருவருக்கு மெகா லக் அடித்துள்ளது.
இதன் மூலம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட மெகா ஜாக்பாட்டிற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5.5 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.

இந்தியருக்கு ஜாக்பாட்: இதன் மூலம் ஓவர் நைட்டில் அவரது வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. இந்த மெகா ஜாக்பாட்டை முகமது அதில் கான் என்பவர் வென்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், வேலைக்காக ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே அவர் சமீபத்தில் லாட்டரியை வாங்கிய நிலையில், அதில் தான் அவருக்கு இந்த மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த ஃபாஸ்ட் 5 டிராவில் தான் இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் துபாயில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்டீரியர் டிசைன் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த மெகா லாட்டரியை வென்றதன் மூலம் இனி அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹாம் (அதாவது ரூ. 5,59,822) கிடைக்கும். இந்த லாட்டரி தனது வாழ்க்கை மேம்படுத்த மிகப் பெரியளவில் நிச்சயம் உதவும் என்று அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
நம்பவே முடியல: இது தொடர்பாக அவர் கூறுகையில், "மிகவும் சரியான நேரத்தில் இந்த பரிசு எனக்குக் கிடைத்துள்ளது. இப்போது எனது குடும்பத்திற்காக நான் மட்டுமே சம்பாதித்து வருகிறேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் எனது சகோதரர் உயிரிழந்துவிட்டார். இப்போது அவரது குடும்பத்தையும் நான் தான் கவனித்து வருகிறேன். எனக்கு வயதான பெற்றோரும் ஐந்து வயது மகளும் உள்ளனர். எனவே இப்போது எனக்கு இந்த கூடுதல் பணம் கிடைப்பது ரொம்பவே நல்லது.
மெகா லாட்டரியை நான் வென்றதை என்னால் முதலில் நம்பவே முடியவில்லை எனது குடும்பத்தினரிடம் இது குறித்துச் சொன்ன போது.. அவர்களாலும் இதை நம்பவே முடியவில்லை. பல முறை உறுதி செய்த பிறகு அவர்கள் நம்பினார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
ஏன் இப்படி: இது தொடர்பாக இந்த மெகா லாட்டரி டிராவை ஏற்பாடு செய்த டைச்செரோஸ் நிறுவனத்தின் தலைவர் பால் சேடர் கூறுகையில், "இந்த ஃபாஸ்ட் 5 லாட்டரி கடந்த 8 வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இதன் முதல் வெற்றியாளரை அறிமுகப்படுத்தியதில் எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை நாங்கள் FAST 5 என அழைக்கிறோம். அதாவது மிக வேகமாக மல்டி மில்லியனர் ஆக இதுவே சிறப்பான வழியாகும். இதன் காரணமாகவே இதை நாங்கள் ஃபாஸ்ட் 5 என அழைக்கிறோம்.
வெற்றியாளர் பணத்தை ஒரேயடியாகச் செலவு செய்துவிடக் கூடாது. அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் வெற்றியாளருக்குப் பணம் கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications