தயக்கம்.. குழப்பம்.. தவறு செய்துவிட்டோம்.. இந்திய அணியின் தோல்வி குறித்து உடைத்து பேசிய கோலி!
துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது ஏன் என்று கேப்டன் கோலி பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியின் தோல்வி குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 110/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணி எளிதாக 14.3 ஓவரில் 111-2 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோய் உள்ளது.

கோலி
இந்த போட்டிக்கு பின் கோலி அளித்த பேட்டியில், வெளிப்படையாக உடைத்து பேச வேண்டும் என்றால்.. நாங்கள் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக இல்லை. நாங்கள் பந்து வீசும் டிபன்ட் செய்யும் அளவிற்கு ஸ்கோர் எதையும் கொடுக்கவில்லை. எங்களுடைய பாடி லாங்குவேஜ் அவ்வளவு தீரம் கொண்டதாக இல்லை. ஆனால் நியூசிலாந்து அணி நன்றாக இருந்தது.

தீரம்
நியூசிலாந்து அணியிடம் நல்ல பாடி லாங்குவேஜ் இருந்தது. எங்களிடம் ஒரு வித தயக்கம் இருந்தது. குழப்பம் இருந்தது. அதிரடியாக அடித்து ஆட வேண்டுமா இல்லை மெதுவாக ஆட வேண்டுமா என்ற குழப்பம் எங்களிடம் இருந்தது. நீங்கள் இந்தியாவிற்கு ஆடும் போது உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். எதிர்பார்ப்போடு இந்திய ரசிகர்கள் மைதானம் வந்து இருந்தனர்.
Recommended Video

மைதானம்
எங்களுக்கு அவர்கள் பெரிய அளவில் ஆதரவும் அளித்தனர். ஆனால் நாங்கள் அவர்களின் எதிர்ப்பார்ப்பை இரண்டு போட்டிகளிலும் பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்களிடம் இருந்த துள்ளல் எங்களிடம் இல்லை. நாங்கள் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும்.

பிரஷர்
அதேபோல் நாங்கள் பிரஷர் மீது கவனம் செலுத்த கூடாது. பிரஷரில் இருந்து விடுபட்டு நாங்கள் ஆட்டம் மீது கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்யவில்லை. அங்குதான் தவறு செய்துவிட்டோம். இன்னும் நாங்கள் பாசிட்டிவ்வாக ஆட வேண்டும். இந்த தொடரில் ஆட இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளது, என்று கேப்டன் கோலி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications