குவைத் கோர தீ விபத்து.. இந்தியர்கள் நிலை என்ன? அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் லிஸ்ட்!
துபாய்: குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், 40க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 53 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40க்கு மேற்பட்டோர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி தேவைப்படுவோர் +965-65505246 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைந்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு வெளியுறவு அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அவசர உதவிக்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. குவைத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் சிக்கி உள்ளவர்களோ, தங்களுக்கு தெரிந்த நபர் பற்றி தகவல் அறிய விரும்புபவர்களோ இந்திய தூதரகத்தின் இந்த எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications