ரெஸ்ட்னு தப்ப முடியாது.. தோனியிடம் "சிக்கிய" ரிஷப் பண்ட்.. பவுண்டரி எல்லைக்கு வெளியே நடந்தது என்ன?
துபாய்: கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி, ரிஷப் பண்ட்டுக்கு மென்டர் தோனி பயிற்சியளித்த காட்சி இப்போது ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது.
Recommended Video
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் அரபு எமிரேட்சில் தொடங்கியுள்ளது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளை மறுநாள் துவங்க உள்ளன. முதல் நாள் இரு போட்டிகள். ஒன்றில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா மோதுகின்றன. இரவு நடைபெறும் போட்டியில், மேற்கிந்திய தீவுகள்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை, உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

ரோகித் ஷர்மா கேப்டன்
இந்திய அணி, ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு பெரிய அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடியுள்ளது. இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில், நேற்று, ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு வகித்தார். அவரது வியூகங்கள் சிறப்பாக இருந்தன. 6வது பவுலர் சான்சுக்காக விராட் கோலியையும் பந்து வீச வைத்து டெஸ்ட் செய்து பார்த்தார் ரோகித் ஷர்மா.

சிறப்பான ஆட்டம்
ரோகித் சர்மா நேற்று அரை சதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் சரியாக பேட் செய்யாத ரோகித் சர்மா, சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருப்பது இந்திய ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. கிட்டத்தட்ட இந்திய அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பார்மில் உள்ளனர். விராட் கோலி மட்டும்தான் டெஸ்ட் மேட்ச் ஆடிக் கொண்டிருப்பதை போல விளையாடி வருகிறார்.

தீவிரம்
இந்திய அணி ஒரு பக்கம் நன்கு உருவாகிவிட்ட நிலையில், அணியின் ஆலோசகர் தோனி, அணியின் விக்கெட் கீப்பர்களை தயார்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களம் கண்டார். நேற்று இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

பெண்ட்டை கழற்றி விட்டார்
அதற்காக ரிஷப் பண்ட்டை சும்மா விடவில்லை தோனி. பவுண்டரி எல்லைக்கு வெளியே நிறுத்தி 'பெண்டை கழற்றி' விட்டார் போங்க. ஆம்.. ரிஷப் பண்ட் கீப்பிங் திறமையை பட்டை தீட்டிக் கொண்டிருந்தார் தோனி. வழக்கமாக பயிற்சியாளர்கள்தான் இதை செய்ய வேண்டும். ஆனால் ஆலசோகர் தோனி அதைச் செய்தார். ஒரு ஸ்டெம்ப்பை நட்டு வைத்து, பந்தை வீசி ரிஷப் பண்ட்டை பிடிக்க வைத்தார். 4வது ஓவர் இடைவெளியில், இந்த காட்சியை டிவி சேனல் ஒளிபரப்பியது. இந்த போட்டோவை, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வேகமாக பகிர ஆரம்பித்தனர்.

சிறப்பான கீப்பர்
இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்றால் அது தோனிதான். பாய்ந்து பாய்ந்து அவர் பந்துகளை பிடிக்க முக்கிய காரணம், கிரிக்கெட் உலகிற்குள் வருவதற்கு முன்பு அவர் கால்பந்து அணி கோல் கீப்பராக செயல்பட்டவர் என்பதும்தான். எனவே தனது வித்தைகள் அத்தனையையும் இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார் தோனி. தோனிக்கு பிறகு ரிஷப் பந்த்தான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட ஆரம்பித்துள்ளார். எனவே அவர் மீது ஸ்பெஷல் ஃபோக்கஸ் செலுத்தி வருகிறார் தோனி.

நெட்டிசன்கள் பாராட்டு
இதைப் பார்த்த நெட்டிசன்கள், அடுத்த தலைமுறை வீரர்களுக்கும், தோனி ஆலோசகராக மாறிவிட்டார் என்று பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications