சீரியஸா இருங்க.. ஐபிஎல் மட்டும் போதும்னு நினைச்சா இப்படித்தான்.. இந்திய வீரர்களை விளாசிய அக்ரம்!
துபாய்: டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களின் மோசமான ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சனம் வைத்துள்ளார்.
2021 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக ஆடி சொதப்பி உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல் ஆட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளால் இந்திய வீரர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை. இதுதான் சர்வதேச மேடையில் இந்தியா சரிய காரணம் என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

வாசிம் அக்ரம்
இந்த நிலையில் இந்திய வீரர்கள் மீது வாசிம் அக்ரம் வைத்துள்ள விமர்சனத்தில், இந்தியா கடைசியாக சர்வதேச டி 20 போட்டியில் கடந்த மார்ச் மாதம் ஆடியது. அதன்பின் எந்த டி 20 தொடரிலும் ஆடவில்லை. நாம் இப்போது நவம்பரில் இருக்கிறோம். இடையில் இந்திய அணி ஐபிஎல்லில் மட்டும்தான் ஆடினார்கள். இதுதான் சிக்கல்.

சீரியஸ்
இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சீரியஸாக எடுத்துக்கொள்வது கிடையாது. ஐபிஎல் போதும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் எத்தனை லீக் போட்டிகளில் வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளுங்கள். லீக் போட்டிகளில் நீங்கள் ஒன்றிரண்டு நல்ல பவுலர்களைத்தான் எதிர்கொள்வீர்கள்.

நல்ல பவுலர்
ஆனால் சர்வதேச போட்டிகளில் ஒரு அணியை எதிர்த்து ஆடினால் 5 நல்ல பவுலர்களை எதிர்த்து ஆடுவார்கள். இது வேறு மாதிரியான அனுபவத்தை கொடுக்கும். அந்த அனுபவம் இந்திய வீரர்களிடம் இல்லை. கடந்த போட்டி முழுக்க நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தது. அவர்கள் டாஸ் தோல்வி அடைந்தது, மன ரீதியாக தோல்வியை நோக்கி சென்றுவிட்டனர்.
Recommended Video

ரோஹித் சர்மா
முக்கியமாக ரோஹித் சர்மாவை 3வது இடத்தில் களமிறங்கியது மிகப்பெரிய தவறாக முடிந்தது. ஒரு முக்கியமான ஆட்டத்தில் இப்படி செய்ய கூடாது. அவர் டி 20 தொடக்க வீரராக நான்கு செஞ்சுரி அடித்தவர். அவரை இப்படி 3வது இடத்தில் இறக்குவது சரியான முடிவு கிடையாது, என்று அக்ரம் விமர்சனம் வைத்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications