ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டிய பேய் மழை.. வெள்ளக்காடான நகரங்கள்.. அச்சத்தில் மக்கள்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியது. மக்களை குளிர் வாட்டி வதைத்த நிலையில், திடீரென இன்று அதிகாலை முதல் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. முதலில் சாதாரணமாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் பேய் மழையாக பெய்தது. மழை வெள்ளத்தால் பல சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்த மழையால் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மருத்துவமனைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் நீடித்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் அவையும் வெள்ள நீரில் மிதக்கின்றன.
வீடுகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மழையின் தீவிரத்தை உணர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து பலரும் சிரமத்துடன் வீடு திரும்பினர். பல மருத்துவமனைகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மழை நீரால் மின் கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்பதால் சில மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.
துபாயில் விமான நிலையத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனிடையே, மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்களில் இருந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications