ஐக்கிய அமீரகத்தில் புதிய கோல்டன் விசா அறிமுகம்.. இது இந்தியர்களுக்கு தான் சூப்பர் ஜாக்பாட்!
துபாய்: பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் ஐக்கிய அமீரகத்தில் குடியேறும் வகையில் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை நாட்டில் சொத்து அல்லது பிஸ்னஸில் பெரிய தொகைகளை முதலீடு செய்யும் நபர்களுக்கே கோல்டன் விசா வழங்கப்பட்டு வந்தது. அந்த நிலையை மாற்றும் வகையிலேயே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியர்கள் கணிசமான அளவில் ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் சூழலில், அவர்களுக்கு இது மிகப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. நர்ஸ்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி கண்டெண்ட் கிரியேட்டர்களும் கூட இந்த புதிய விரிவாக்கப்பட்ட கோல்டன் விசா திட்டத்தில் பயன் பெறலாம்.

கோல்டன் விசா
ஐக்கிய அமீரகத்தில் முதலில் கடந்த 2019இல் கோல்டன் விசா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் அதிகம் முதலீடு செய்வோருக்குத் தான் கோல்டன் விசா வழங்கப்பட்டது.. 2022இல், 10 வருட விசாவுக்கான குறைந்தபட்சச் சொத்து வரம்பு 2 மில்லியன் தினராக குறைக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பினரையும் முதலீடு செய்ய ஊக்குவித்தது. அதேபோல குறிப்பிட்ட தொழிலிலும் முதலீடு செய்தால் துபாயின் கோல்டன் விசாவைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் கோல்டன் விசா திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
யாருக்கு உதவும்
அதன்படி இப்போது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி விஞ்ஞானிகள், ஒரு கம்பெனியின் நிர்வாகிகள், டாப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், 15+ வருட அனுபவமுள்ள நர்ஸ்கள், யூடியூபர்கள், பாட்காஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர்கள், 25 வயதுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இ-ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள் மற்றும் சொகுசு படகு உரிமையாளர்கள் மற்றும் கடல்சார் நிர்வாகிகள் ஆகியோரும் கோல்டன் விசா பெற முடியும்.
புதிய பரிந்துரை அடிப்படையிலான விசா கொள்கையின் கீழ், இந்தியர்கள் இப்போது AED 1,00,000 (சுமார் 23.30 லட்சம் ரூபாய்) செலுத்துவதன் மூலம் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும். மூன்று மாதங்களில் 5,000 இந்தியர்கள் பரிந்துரை அடிப்படையிலான விசாவுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம்
சோதனை அடிப்படையில் இந்த விசா திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், முதற்கட்டமாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பிறகு மெல்ல இந்தத் திட்டம் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் என்று தெரிகிறது கோல்டன் விசா கிடைத்த பிறகு, ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களையும் துபாய்க்கு அழைத்து வர முடியும்.
இது குறித்து ராயத் கமல் கூறுகையில், "இந்த விசாவின் அடிப்படையில் நீங்கள் வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்களை வைத்திருக்கலாம். நீங்கள் இங்கே எந்த வணிகம் அல்லது தொழில்முறை வேலையும் செய்யலாம்" என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications