அந்த பரிதாபம் மட்டும் நடந்துவிட கூடாது.. ஸ்பின் புயல் ஆப்கானை எதிர்கொள்ளும் இந்தியா.. 3 சிக்கல்கள்!
துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று இந்திய அணி ஆட உள்ள டி 20 உலகக் கோப்பை போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு மிக முக்கியமான நாக் அவுட் போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
Recommended Video
2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி மோசமாக ஆடி வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு செமி பைனல் வாய்ப்பு சிக்கலாகி உள்ளது.

சிக்கல்
இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாக இருக்க போகிறது. இன்று தோல்வி அடையும் பட்சத்தில் இந்திய அணி மொத்தமாக தொடரில் இருந்து வெளியேறும். இதனால் இன்று எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இன்று வெல்லும் பட்சத்தில் நியூசிலாந்து அணி அடுத்து ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா செமி செல்ல சில வாய்ப்புகள் உள்ளன.

2007
2007ல் இதே போன்ற சூழ்நிலையில்தான் இந்தியா இருந்தது. அந்த 2007 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து இலங்கை, வங்கதேசம் அணிகளிடம் தோல்வி அடைந்து 50 ஓவர் உலகக் கோப்பையில் குழு ஆட்டத்திலேயே வீழ்ந்தது. அந்த போட்டியில் இந்தியாவின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அது மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது.

அதே போல நடக்க கூடாது
2007ல் நடந்தது போன்ற பரிதாபம் இந்த முறை நடக்க கூடாது. 2007 வங்கதேசத்திடம் இந்தியா வீழ்ந்து வெளியேறியது போல இன்று ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்து இந்தியா வெளியேற கூடாது. இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்திய அணிக்கு 3 முக்கியமான சிக்கல்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த சிக்கலைகளை இந்தியா முறையாக எதிர்கொள்ள வேண்டும்.

சிக்கல் 1
இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. ஜடேஜா, கோலி தவிர வீரர்கள் யாருமே பார்மில் இல்லை. ரோஹித், ராகுல், இஷான் என்று வரிசையாக டாப் ஆர்டர் வீரர்கள் மோசமான பார்மில் உள்ளனர். அதேபோல் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் இரண்டும் மோசமாக உள்ளது. ஆப்கானை வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணியின் பேட்டிங் இன்று கிளிக் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.

சிக்கல் 2
இந்திய அணியின் இரண்டாவது சிக்கல் பவுலிங். ஸ்பின் பவுலர் வருண் இரண்டு போட்டியாக விக்கெட் எடுக்கவில்லை. அதேபோல் பும்ரா தவிர ஷமி, புவனேஷ்வர் குமார், தாக்கூர் ஆகியோரும் சரியாக விக்கெட் எடுக்கவில்லை. ஆப்கானின் டாப் ஆர்டர் வேறு மிக சிறப்பாக உள்ளது. இதனால் அணிக்குள் அஸ்வின் போன்றவர்களை கொண்டு வர வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. பவுலிங்கில் உடனே மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.

சிக்கல் 3
கடைசியாக இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் ஸ்பின் பவுலிங் சிக்கலாக இருக்கும். ரஷீத் போன்ற லெக் ஸ்பின் பவுலர்கள் சவாலாக இருப்பார்கள். கோலி, சூர்யா குமார் போன்றவர்கள் ஸ்பின் பவுலிங்கில் சரியாக ஆட மாட்டார்கள் என்பதும் இந்திய அணிக்கு சிக்கலாக உள்ளது. பிட்ச் வேறு ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி எப்படியாவது டாஸ் வென்று, ஆப்கானிஸ்தான் ஸ்பின் பவுலிங்கை முறையாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications