ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி! கடும் காய்ச்சலால் பாதிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் நேற்றைய தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பிய அவருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. இதையடுத்து உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், இன்றைய தினம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பிறந்தநாள் என்பது தான். மகன் இறந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என அறிவித்துவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க மட்டும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இன்னும் ஓராண்டு கூட நிறைவடையவில்லை. கடந்த மார்ச் மாதமும் இதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக இளங்கோவனுக்கு அடிக்கடி உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்றும் அவரை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது கடினம் எனவும் கடந்த மாதம் தான் ஒபனாக பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அதேபோல் கடந்தவாரம் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வழக்கம் போல் பரபரப்பாக பேசி பஞ்சாயத்தை கூட்டியிருந்தார்.
இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் விரைவில் குணம் அடைய வேண்டி அவரது ஆதரவாளர்கள் வேண்டி வருகின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மட்டுமல்ல இப்போது எங்கு பார்ப்பினும் காய்ச்சல், சளி, இருமல் என பொதுமக்களும் வானிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications