மூளை நோயால் பாதிப்பு- 4 வயது திவ்யாவின் அவசர சிகிச்சைக்கு அனைவரும் உதவுங்கள்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் விகாஸ் குமாரின் 4 வயது மகள் திவ்யா மூளை நரம்பில் ஏற்பட்டுள்ள நோயால் அபயகரமான நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க உதவுங்கள்.
இது தொடர்பாக கண்ணீருடன் குழந்தை திவ்யாவின் தந்தை விகாஸ் குமார் கூறுகையில், திவ்யாவால் இப்போது பேசவோ நடக்கவோ முடியாது. ஆனால் அவளுடைய புன்னகை எப்படி மோசமான நாளையும் மகிழ்ச்சியான நாளாக எனக்கு மாற்றிவிடும். அவளுடைய உயிரோட்டமான இயல்புதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

என் குழந்தையின் மன தைரியம் என்னை அவளுடைய சிகிச்சைக்கு பணம் சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையை வலுவாக என்னுள் வைத்திருக்கிறது. குழந்தை ஒவ்வொரு நாளும் படுக்கையில் இருந்து எழுந்து சொந்தமாக நிற்க முயற்சிக்கிறாள். ஆனால் தோற்று போகிறாள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறாள். குழந்தையின் சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அது மட்டும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை மாறிவிடும். அதற்காக நான் இந்த நிதி திரட்டலைத் தொடங்கி உள்ளேன். என் அழகு செல்லத்திற்கு சிறந்த வாழ்க்கை வழங்க உங்களால் முடிந்தை உதவுங்கள்.
திவ்யா பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தையாகவே பிறந்தாள். அவள் அழுவாள், சிரிப்பாள். வீட்டைச் சுற்றி வலம் வருவாள், அவள் 1 வயதை நெருங்கும்போது நிற்க சிறிய முயற்சிகள் செய்வாள். அவள் சொந்தமாக சில அடி எடுத்து வைக்க முயற்சி செய்வாள். எங்களின் மகளின் நடையை கண்டு நானும் என் மனைவியும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். அடுத்த சில மாதங்களுக்கு பிறகு, அவள் முதல் வார்த்தை "அம்மா!" என்றாள். அதன்பிறகு என் குழந்தை திவ்யாவிடம் அப்பா என்று சொல்லு என்று உருகினேன். அவள் அப்பா என்று நீண்ட முயற்சிக்கு பின் என்னை அழைத்தாள். என் குழந்தையின் அன்பா நினைவுகளை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்னவென்றால், இந்த 2 (அம்மா, அப்பா) விலைமதிப்பற்ற சொற்கள் மட்டுமே என் மகள் கடைசியாக சொல்வதை நான் கேட்டது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கடைசியாக திவ்யா தனியாக நின்று என் மனைவியையும் என்னையும் அழைத்தாள். 28 ஆம் தேதி, அவரது தாயார் அவருக்கு உணவளிக்கும் போது, திவ்யா தனது கை கால்களின் கட்டுப்பாட்டை இழந்தாள். அவளால் அவளது எந்த உறுப்புகளையும் தூக்க முடியவில்லை. அவள் நிற்க முயற்சி செய்தால் அவள் உடனடியாக விழுந்தாள்.
ஏதுவும் சரியாக இல்லையே என்று எனக்கு தோன்றியது. அதிர்ச்சி அடைந்த. நான் அவளை உடனடியாக அழைத்துக்கொண்டு என் அருகில் உள்ள மருத்துவரிடம் விரைந்தேன். "அவள் நேற்று நடந்து அம்மா, அப்பா என்று சொல்லிக்கொண்டிருந்தாள். திடீரென்று பேசுவதையும், எழுந்து நிற்கும் திறனை அவள் எப்படி இழக்க முடியும்? " என்று கேட்டு மருத்துவர்களிடம் பரிசோதிக்குமாறு கதறி அழுதேன். துரதிர்ஷ்டவசமாக, அவரால் சரியான என்ன நோய் என்பதை கண்றிய முடியவில்லை. அதனால், நான் முன்பு இருந்ததை விட அதிகமாக பயப்பட ஆரம்பித்தேன். பல மருத்துவர்களிடம் அவளை அழைத்துச் சென்ற பிறகு, ஸ்கேன் செய்யச் சொன்னேன். "என் பெண்ணுக்கு ஏதோ மோசமான தவறு இருக்கிறதா?" நான் கேட்டேன். நான் கவலைப்பட வேண்டாம், சீக்கிரம் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் இதுபோன்ற நெருக்கடியில் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்" என்றார்

மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், தசை ஒருங்கிணைப்பு இல்லாததால் குழந்தை திவ்யாவால் சரியாக நடக்க முடியவில்லை. அவ்வப்போது வலிப்பு ஏற்படுகிறது. திவ்யாவுக்க போலியோ பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டார். 2 மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் திரும்பி வந்தபோது, அவை எதிர்மறையாக இருந்தன. டாக்டர்களைப் போலவே பெற்றோர்களும் குழப்பமடைந்தனர்.
இதனால் சொந்த ஊரில் இருந்து 1700 கி.மீ பயணத்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரிக்கு வந்தனர், அங்கு ஒரு குழந்தை நரம்பியல் நிபுணர் குழந்தை திவ்யாவின் நிலையை ஆராய்ந்து, அவர் ஒரு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், திவ்யாவுக்கு நடக்க முடியாமல் போகலாம் என்பது தெரியவந்தது.

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு ரூ .60,000 மதிப்புள்ள நீண்டகால சிகிச்சை திவ்யாவுக்கு தேவைப்பட்டது. இதை செய்ய முடியாமல், பெற்றோர்கள் தங்கள் மகளை காப்பாற்ற அரசாங்க நிதியுதவி பெற விண்ணப்பித்தனர், ஆனால் பெற முடியவில்லை. அவர்களுக்கு கிடைத்த சிறிய உதவிகள் மூலம் திவ்யாவுக்கு 2 வருடங்கள் சிகிச்சை அளித்தனர், மேலும் அவரது சிகிச்சையை நடுப்பகுதியில் நிறுத்த வேண்டிய ஆபத்து ஏற்பட்டது. அவரது ஆட்டோ ரிக்ஷா டிரைவர் தந்தை ஒரு மாதத்திற்கு வெறும் ரூ .6,000 மட்டுமே சம்பாதிக்கிறார், தங்களின் ஒரே குழந்தையின் சிகிச்சைக்கு பணம் சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறார்.
தற்போதைய நிலையில் திவ்யாவை காப்பாற்ற ஒரே நம்பிக்கை அவரது சிகிச்சைக்குத் தேவையான நிதியை திரட்டுவதே. பொதுமக்களாகி உங்களை அணுகுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். நீங்கள் உதவி செய்தால், திவ்யா காப்பாற்றப்பட்டு, நிறைவான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும். குழந்தையின் விதியை மாற்றி எழுத உங்களால் முடியும். நீங்கள் உதவுவீர்களா?












Click it and Unblock the Notifications