ஈரோடுக்காரருக்கு ஈரமான மனசு.. 10 ரூபாய்க்கு 3 வேளையும் தரமான அன்லிமிட்டெட் சாப்பாடு
ஈரோடு: 10 ரூபாய்க்கு 3 வேளையும் தரமான அன்லிமிட்டெட் சாப்பாடு வழங்கி பொதுமக்களை மகிழவைத்து வருகிறது ஒரு ஓட்டல் ஒன்று. ஈரோட்டில் தான் இப்படி ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது.
குறைந்த விலையில், அதேநேரம் தரத்தில் சமரசம் செய்யாமல் சாப்பாடு விற்கும் ஹோட்டல்களுக்கு தமிழ்நாட்டில் என்றுமே மவுசு அதிகம். அப்படிப்பட்ட ஓட்டல்களை தேடிதேடி சென்று மக்கள் சாப்பிடுவார்கள்,

அதிலும் மிகவும் மலிவு விலை ஓட்டல் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த ஓட்டலை மக்கள் கொண்டாடுவார்கள். அப்படி ஒரு உணவகத்தை பற்றித்தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.
ஜவுளித் தொழில் நகரமான ஈரோட்டில் ஆற்றல் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் அசோக்குமார் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனா காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்டதை நினைவு கூறும் வகையில், காலை மதியம் , இரவு என மூன்று வேளையும் ஆற்றல் பவுண்டேசன் சார்பில் தரமான உணவு அளவில்லாத அளவிற்கு(அன்லிமிலெட்) வழங்கப்படுகிறது.
காலையில் 8 மணி முதல் 10 மணி வரை இட்சில, சாம்பார் மற்றும் சட்னி 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2மணி வரை சாதம், சாம்பார், மோர், ஊறுகாய், பொறியல் ஆகியவை வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இரவில் 7மணி முதல் 9 மணி வரை இட்லி, சாம்பார் மற்றும் சட்னி 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் தொடங்கப்பட்டுள்ள உணவகத்தில் , உணவை வீணாக்கக்கூடாது என்ற கண்டிப்புடன் உணவு வழங்கப்படுகிறது. முதலில் இலவசமாகவே வழங்க திட்டமிட்ட நிலையில், இலவச உணவு என்றால், மக்களுக்கு உணவின் மீது மதிப்பு இருக்காது என்பதால் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உணவகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஈரோட்டின் மற்ற பகுதிகளிலும் ஆரம்பிக்க உள்ளதாக ஆற்றல் பவுண்டேசன் நிறுவனர் அசோக்குமார் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications