திருவிழா கோலம் பூண்ட ஈரோடு கிழக்கு..பணமழை..கட்டுப்படுத்த வந்த 2 கம்பெனி மத்திய படை வீரர்கள்
ஈரோடு: இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். இந்தோ- திபெத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஈரோடு வர உள்ளனர். 27 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நான்கு முனை போட்டி நிலவுவதால் ஈரோடு கிழக்குத் தொகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கி விட்டனர்.

தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்தனர். ஆளும் திமுக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக அளித்த புகாரை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரு தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படை அனுப்பப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் கமிஷன் அனுப்புகிறது. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து, அதைத் தடுக்க 6 பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு ரூ.25.43 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாகன சோதனை தொடர்ந்து தினமும் நடத்தப்படுகிறது.
24 மணி நேரமும் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 6 பறக்கும்படை குழுக்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றனர். பணப்பட்டுவாடா குறித்த புகார் வந்ததும் சம்பவ இடத்துக்கு செல்ல பறக்கும் படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடர்ந்து எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களையும் தேர்தல் கமிஷன் நியமிக்கும்.
அ.தி.மு.க. சார்பில் 5 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் அது சரியாகத்தான் உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் வந்தனர். இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் மத்திய படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து இந்தோ- திபெத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஈரோடு வர உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications