திம்பம் மலைச்சாலையில் கோர விபத்து.. பிரேக் பிடிக்காமல் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்!
ஈரோடு: திம்பம் மலைப்பாதை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே இன்று வேன் ஒன்று கவிழ்ந்து 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். திடீரென வேன் பிரேக் பிடிக்காமல் தடுப்பு கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது.

இந்த மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் ஒன்று கவிழ்ந்து 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையத்தை சேர்ந்தவர்கள் கென்னேகால் சென்றுவிட்டு திரும்பும்போது, திம்பம் மலைப்பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேன் பிரேக் பிடிக்காமல் தடுப்பு கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications