பாஜக இல்லைனா டெபாசிட்டே காலி.. தாமரையிடம் விழுந்த எடப்பாடி? இவர் என்ன இப்படி சொல்லி இருக்காரே!
எடப்பாடி தன்னை கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு இணையான தலைவராக நினைக்கிறார். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் பாஜக இல்லை என்றால் எடப்பாடி டீமிற்கு டெபாசிட் கிடைத்து இருக்காது. அதனால்தான் அவர் பாஜகவிடம் விழுந்துவிட்டார் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் அதிமுக மாபெரும் தோல்வியை சந்தித்து உள்ளது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதிமுகவின் இந்த தோல்வியால் எடப்பாடி பாஜக தயவை மீண்டும் நாடுவதாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அதிமுக மேலும் வலிமை இழக்கும். இதனால் சீமான் வலிமை அடைவார். அதிமுகவின் வாக்குகளை சீமான் எடுக்க போகிறார். எடப்பாடிக்கு எதிராக ஜாதி எதிர்ப்பு உள்ளது. எடப்பாடிக்கு எதிரான அதிமுக வாக்குகள் சீமானுக்கு செல்ல போகிறது. சீமான் இந்த வாக்கு வங்கியை அள்ள போகிறார். அதை எடப்பாடி புரிந்து கொள்ள மாட்டார். கவுண்டர்கள் இல்லாத அதிமுக வாக்குகளை சீமான் தூக்கிக்கொண்டு செல்ல போகிறார். அப்போது இதை இவர்கள் புரிந்து கொள்வார்கள். சீமான் வளர்ந்த பின் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கில் சீமானின் பேச்சால் மாற்று மொழிக்காரர்கள் ஸ்டாலின் பக்கம் நகர்ந்து உள்ளனர். சவுராஷ்டிரா மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் கூட ஈரோட்டில் திமுக பக்கம் சென்றுள்ளனர். இதற்கு சீமானின் பேச்சுதான் காரணம். சீமான் பேச்சால் பிற மொழி மக்கள் ஸ்டாலின் பக்கம் நகர தொடங்கி உள்ளனர். இது ஈரோட்டில் அவருக்கு உதவியாக மாறி உள்ளது. ஈரோடு கிழக்கில் இன்னொரு பக்கம் வெள்ளாள கவுண்டர்கள் அல்லாத வாக்குகள் எடப்பாடிக்கு எதிராக சென்றுள்ளது. கவுண்டர்கள் அல்லாத மற்ற அதிமுகவினர் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

தேர்தல் தோல்வி
இந்த தோல்வி காரணமாகவே எடப்பாடி விழுந்துள்ளார். குஜராத் தேர்தலுக்கு பாஜகவை பாராட்டாத எடப்பாடி 3 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜகவை பாராட்டி உள்ளார். எடப்பாடி பாஜகவிடம் விழுந்துவிட்டார் என்பதைதான் இது காட்டுகிறது. மோடியால் இரட்டை இலைக்கு கொஞ்சம் வாக்குகள் கிடைத்து உள்ளன. ஈரோடு கிழக்கில் பாஜக இல்லை என்றால் எடப்பாடி டீமிற்கு டெபாசிட் கிடைத்து இருக்காது. அதனால்தான் அவர் பாஜகவிடம் விழுந்துவிட்டார். எடப்பாடி குஜராத் வெற்றியை பாராட்டவில்லை. இப்போது பாராட்டுகிறார்.

பாராட்டு
இப்போ பாருங்கள் பாராட்டிவிட்டார். இது எடப்பாடியின் வீழ்ச்சியை காட்டுகிறது. அதிமுகவில் இருக்கும் பாஜக எதிர்ப்பாளர்கள் சிவி சண்முகம் போன்றவர்கள் இதை பார்க்க வேண்டும். பாஜக இல்லாமல் வலிமை இருக்காது என்பதை எடப்பாடி உணர்ந்து கொண்டார். பாஜக இல்லாமல் 15 சதவிகிதம் வாக்குகளை தாண்ட முடியாது என்பதை எடப்பாடி உணர்ந்து கொண்டார். அதனால்தான் எடப்பாடி இறங்கி வந்துள்ளார். எடப்பாடியை மதிக்கிறேன். ஆனால் எடப்பாடி மட்டும் தனிப்பெரும் தலைவராக இருக்க மாட்டார் என்பதைத்தான் நான் சொல்கிறேன். அதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும், என்று ரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் கூறி உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications