3 + பாயிண்ட்ஸ்.. சுதீஷ்ஷே அரண்டு போயிட்டாரே.. பிரேமலதாவின் சைலண்ட் "மெசேஜ்".. லேசாக நிமிர்ந்த "முரசு"
விஜயகாந்தின் தேமுதிகவின் விஜயபிரபாகரனின் அரசியல் என்ட்ரி ஈரோடு கிழக்கில் ஆரம்பமாகி உள்ளது
ஈரோடு: இன்றைய தினம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும்நிலையில், தேமுதிக ஆரம்பத்திலேயே சறுக்கலை பெற்றுவிட்டது.. டெபாசிட்கூட வாங்குவது கடினம்தான் என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லப்பட்டும்விட்டது.. ஆனாலும், அக்கட்சி சில பாசிட்டிவ் தாக்கங்களை தொகுதியில் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.
இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டனர்.
ஆனால், தேமுதிக இந்த முறை போட்டியிடாது என்றே அனைவரும் நினைத்தார்கள்.. எப்படியும் பாமக போல ஒதுங்கி கொள்ளும் அல்லது யாராவது ஒரு கட்சிக்கு ஆதரவை தரும் என்றும் கணிக்கப்பட்டது..

தேமுதிக கணக்கு
ஆனால், திடீரென போட்டியில் குதித்தது.. உடனடியாக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.. ஒரே நாளில் ஆலோசனை நடத்தி, அன்றைய தினமே வேட்பாளரையும் அறிவித்தது.. இதனால் மற்ற கட்சிகள் எல்லாமே திகைத்து போனார்கள்.. தேமுதிகவின் இந்த முடிவுக்கு காரணம் இல்லாமல் இல்லை.. எப்படியும் தேமுதிக இந்த தொகுதியில் டெபாசிட்டை வாங்க முடியாது என்பதை பிரேமலதா அறியாமல் இல்லை.. ஆனாலும் அவரது அரசியல் கணக்கு என்பது வேறாகத்தான் இருந்தது..

விஜய பிரபாகரன்
இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் ஏராளம்.. அதனால்தான், கடந்த 2011 தேர்தலிலேயே திமுகவை இந்த தொகுதியில் தோற்கடித்தது தேமுதிக.. இப்போதும் இந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதாலேயே, அவர்களை நம்பியே பெரிதும் களமிறங்கியது.. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு எந்த அளவுக்கு தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியுமோ அவ்வளவும் எம்பி தேர்தலில் தங்களுக்கு உதவும் என்றும் தேமுதிக கணக்கு போட்டது.. அதைவிட முக்கியமாக, விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் விதமாகவும் இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ள முயன்றதாக சொல்லப்பட்டது..

விஜயபிரபாகரன்
இதற்காகவே, ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ்ஷூம், விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் களத்துக்கு முன்கூட்டியே வந்து சேர்ந்தார்கள். எந்த தேர்தல் என்றாலும், தேமுதிகவுக்கு இருக்கும் ஒரே பிரச்சார பீரங்கியும் + பலமும் + தெம்பும் பிரேமலதா மட்டும்தான்.. ஆனால், இந்த முறை விஜயபிரபாகரனின் பிரச்சாரத்துக்கான அடித்தளத்தை இந்த தேர்தல் ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்..

மீன்கடைக்காரர்
காரணம், விஜயபிரபாகரன் இணைந்து மேளதாளங்கள் முழங்க வீதிவீதியாய் நடந்து சென்று கொட்டுமுரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.. அங்கிருந்த மீன் கடைகளுக்கு சென்று, மீன் விற்பனை செய்தார்.. எதிரே வந்த ஒரு பாட்டிக்கு விஜயபிரபாகரன் தண்ணீர் பிடித்து கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.. இப்படி தொகுதி மக்களிம் விஜயபிரபாகரன் நெருங்கியே வந்த நிலையில், அவரது பேச்சும் தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுதீஷ்ஷா
"விஜயகாந்த் உங்களின் சொத்து.. அவர் வந்தால் தங்கதட்டில் வைத்து மக்களை நான் பார்த்து கொள்வேன்.. நீங்கள் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். விரைவில் அவர் நலமுடன் எழுந்து வந்து உங்களை சந்திப்பார் என்றார் உருக்கமாக.. பிறகு திடீரென தேமுதிக பிரச்சாரத்தில் ஒரு சலசலப்பு கிளம்பியதுமே கொந்தளித்தார் விஜயபிரபாகரன்.. "இந்த சவுண்டெல்லாம் இங்க விடக்கூடாது. முறையாக பர்மிஷன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்கிறோம்... விஜயகாந்த் மகன் சின்னப்பையன்னு மட்டும் நினைச்சிடாதீங்க.. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக வந்து நிற்பேன்.. நீங்கள் விஜயகாந்த், பிரேமலதா 2 பேரையும் பார்த்திருக்கலாம்.ஆனால், நான் அவங்க 2 பேரும் சேர்ந்த விஜயபிரபாகரன்... நீங்கள் பார்த்திருக்க மாட்டீங்க" என்று சீறினார் விஜயபிரபாகரன்.

குஷி + பூரிப்பு
இதை பார்த்ததுமே தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் குஷியானார்கள்... இதைதான் தேமுதிக மேலிடமும் எதிர்பார்த்து அரசியல் கணக்கு போட்டது.. இன்றைய தினம் ரிசல்ட் வெளியாகி கொண்டிருக்கிறது.. தேமுதிகவை முந்திக்கொண்டு, நாம் தமிழர் கட்சி முந்திக்கொண்டு விட்டது. தேமுதிக டெபாசிட் வாங்குவதே கஷ்டம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. எனினும், கட்சி தலைமையோ, தாங்கள் நினைத்ததை கிட்டத்தட்ட சாதித்துவிட்டதாக கருதுகிறது.. அமமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகளே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த நிலையில், களத்தில் குதித்து தனித்து போட்டியிட்டதையே தேமுதிக தொண்டர்கள் பிளஸ் ஆக பார்க்கிறார்களாம்..

ஜாம்பவான்கள்
இது ஒரு இடைத்தேர்தல் என்றாலும், அக்கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சல் + வாக்கு வங்கியை பலப்படுத்துதல் + விஜயபிரபாகரனுக்கான என்ட்ரி என 3 விதமான பிளஸ்களுடன் தேமுதிக தற்போது தெம்பாகி உள்ளதாகவே தெரிகிறது.. இவை அத்தனையும் எம்பி தேர்தலின்போது கைதூக்கி உதவும் என்றும் நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இந்த முறை பிரேமலதாவின் பிரச்சாரத்தில், பாஜகவையும் தாக்கி பேசவில்லை, திமுகவையும் தாக்கி பேசவில்லை.. முழுக்க முழுக்க அதிமுகவை அட்டாக் செய்து பேசியிருந்தார்.. அதேபோல, முதல்வர் ஸ்டாலினை, எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக பேசியிருந்தது தவறு என்று சுதீஷூம் கூறியிருந்தார்.. எனவே, எம்பி தேர்தலுக்கான கூட்டணி யாருடன்? என்ற எதிர்பார்ப்பையும் தேமுதிகவின் பிரச்சாரங்கள் இந்த முறை ஏற்படுத்தி விட்டு போயுள்ளன..

அபாய மணி
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், விஜயகாந்த்துக்கு ரசிகர்களும் தொண்டர்களும் அதிகம் இருப்பதாக நம்பிதான் இங்கு தேமுதிக போட்டியிட களமிறங்கியது.. அப்படியிருந்தும், அவர்கள் இந்த முறை விஜயகாந்த்தை கைவிட்டுவிட்டார்களா? என்பதை தேமுதிக அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.. சுயேச்சை வேட்பாளரைவிட, குறைவான வாக்குகளை இன்றைய தினம் தேமுதிக வேட்பாளர் பெற்றுள்ளார் என்றால், கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளதை நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. அதைவிட முக்கியமாக, மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து, மக்களுடன் மக்களாக நெருங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை, இந்த இடைத்தேர்தல் சுட்டிக்காட்டி விட்டு போயுள்ளதாக தெரிகிறது.. பார்ப்போம்..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications