ஈரோட்டில் பிரபல ஜவுளிக் கடையில் தீபாவளி மறுநாளான இன்று சலுகை.. அதிகாலை 3 மணிக்கே அவ்வளவு கூட்டம்
ஈரோடு: ஈரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கடை முன் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த காரணத்தால் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டது. கடை திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு துணிகளை மக்கள் வாங்கி சென்றனர். அந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து தீபாவளியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் நேற்றும், மற்ற மாநிலங்களில் இன்றும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்று தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். சில பகுதிகளில் நாளையும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆகும். இதையடுத்து, பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்,. இனிப்பு, காரம், முறுக்கு, அதிரசம் வகைகளை சுவைத்தும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை அணிந்தும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தீபாவளி பண்டிகை வந்தாலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் களைகட்டும்.எல்லாருமே புதிய துணி அணிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. 99 சதவீதம் மக்கள் புத்தாடை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புத்தாடை வாங்குவது, நகைகள் வாங்குவது, செருப்பு, வளையல்கள், கம்மல்கள் வாங்குவது, தீபாவளி பர்ச்சேஸ் என்பது தமிழ்நாடு முழுக்க கடந்த இரண்டு நாட்களாக களைக்கட்டி வந்தது. குறிப்பாக தீபாவளிக்கு முதல் நாள் ஏராளமானோர் கடை வீதிகளில் குவிந்திருந்தனர்.
தஞ்சாவூரில் எல்லாம் தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவு, கடைவீதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. இதேபோல் கும்பகோணத்திலும் அதிகாலை 3மணிக்கு கூட கூட்டம் அளவுக்குமீறி இருந்தது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், என எல்லா ஊரிலும் தீபாவளிக்கு முதல் நாள் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த முறை பட்டாசுக்கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பட்டாசு விற்பனையும் மிக அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் தீபாவளியை ஒட்டி கடைகளில் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஈரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கடை முன் திரண்டனர். கூட்டம கட்டுக்கடங்காமல் அதிகரித்த காரணத்தால் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டது. கடை திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு துணிகளை மக்கள் வாங்கி சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications