செந்தில் பாலாஜியின் உறவினர் டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் சிக்கிய முக்கிய டைரியால் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு அருகே செந்தில் பாலாஜியின் உறவினரான சச்சிதானந்தம் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்திய அதிகாரிகள் மடிக்கணினி, டைரி உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருமான வரிச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆங்காங்கே குவிந்து கொண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளுவில் திமுகவினர் ஏற்பட்டனர்.
இதில் காயமடைந்த பெண் அதிகாரி காயத்ரி உள்பட 4 வருமான வரித் துறை அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு திண்டல் அருகே சக்தி நகரில் செந்தில் பாலாஜியின் உறவினர் சச்சிதானந்தம் என்பவரது வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று 12 மணி முதல் சோதனை செய்து வருகிறார்கள்.
சச்சிதானந்தம் என்பவர் ஈரோடு டாஸ்மாக் கடைளிலிருந்து மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் போக்குவரத்து ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இன்று அவருடைய வீட்டில் அதிரடியாக நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள் அங்கிருந்த மடிக்கணி, கணினி, சச்சிதானந்தம் பயன்படுத்தி வந்த டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சச்சிதானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர்கள் போன்ற ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அவரது வீட்டில் உள்ள பத்திரங்கள், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள.

ஏற்கெனவே மற்ற இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தியதால் சச்சிதானந்தம் வீட்டில் பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டில் கேரளாவை சேர்ந்த 6 வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications