எலி பொறியில் சிக்கியது போல.. திமுக சிக்கிக் கொண்டது..மக்கள் தக்க பாடம் புகட்டுவாங்க.. ஜெயக்குமார்

எலி பொறியில் சிக்கியது போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சிக்கிக் கொண்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் சரியாக மாட்டிக்கொண்டார்கள். எலி பொறியில் சிக்கியது போல மாட்டிக்கொண்டனர். எங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுப்பதன் மூலம் தக்க பாடம் புகட்ட இருக்கின்றனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கு நிற்பதற்கு தில் உள்ளது அதனதால் நிற்கிறோம். ஓபிஎஸ்க்கு முன்மொழியவும் வழிமொழியவும் ஆள் இல்லை. தினகரனுக்கு தேர்தல் என்றாலே பயம் வந்துவிட்டது. அதனால் ஜகா வாங்கிவிட்டார்.

ஆனால் தமிழ்மாநில காங்கிரசிடம் எங்கள் விருப்பத்தை தெரிவித்தோம். அவர்கள் நிற்க சொன்னதால் நாங்களும் நிற்கிறோம். இது எங்களுடைய தைரியத்தை காட்டுகிறது. ஆனால், அதிமுக நிற்கிறது அதனால் நாங்கள் நிற்கிறோம் என்று திமுக வந்ததா.. வரவில்லையே...

காங்கிரஸ் தோற்க போவது உறுதி

காங்கிரஸ் தோற்க போவது உறுதி

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை வீணான சுமை என்று திமுக சொல்லிக்கொண்டு வருகிறது. அதனால் காங்கிரஸ் தோற்க போவது உறுதி. தோற்றவுடன் என்ன சொல்வார்கள் என்றால் நாங்கள் நிற்கவில்லை.. காங்கிரஸ்தான் நின்றது. எங்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று கை கழுவி விடுவார்கள். தமிழ்நாட்டில் வாக்களித்த மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். கேஸ் மானியம் கொடுக்கவில்லை. மகளிருக்கான உரிமைத்தொகை கொடுக்கப்படவில்லை.

முதல்வர் தொகுதியில் கொள்ளை

முதல்வர் தொகுதியில் கொள்ளை

நீட் ரத்து கிடையாது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. நேற்று கூட 9 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தொகுதியிலே கொள்ளை நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. விலைவாசி ஒருபக்கம் ஏறிக்கொண்டு இருக்கிறது. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

எலி பொறியில் சிக்கியது போல

எலி பொறியில் சிக்கியது போல

இதெல்லாம் இந்த அரசாங்கத்திற்கு கண்ணுக்கு தெரிவது இல்லை. கேட்டால் வாய் கூசாமல் முதல்வர் பொய் பேசுகிறார். கேட்டால் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக சொல்கிறார்கள். இடைத்தேர்தலில் சரியாக மாட்டிக்கொண்டார்கள். எலி பொறியில் சிக்கியது போல மாட்டிக்கொண்டனர். எங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுப்பதன் மூலம் தக்க பாடம் புகட்ட இருக்கின்றனர். எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் வெற்றி இருக்கும்... அவர்களின் தோல்வி இருக்கும். எப்பாடுபட்டாவது ஜெயிக்க வேண்டும் என பணத்தை வாரி இறைக்கின்றனர்.

அப்படி ஒரு சின்னம் தேவையா?

அப்படி ஒரு சின்னம் தேவையா?

கருணாநிதி பேனா நினைவுச்சின்ன விவகாரத்தை பொறுத்தவரை மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து அப்படி ஒரு சின்னம் தேவையா? ஆறும் கடலும் கலக்ககூடிய பகுதி பட்டினப்பாக்கம். மீன் இன உற்பத்தி பாதிக்கும். இதனால், மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து நினைவுச்சின்னம் அவசியமா? அறிவாலயத்தில் அமைத்துக்கொள்ளுங்கள். அவ்ளோ இடம் உள்ளது. அங்கு 134 இல்லை, 200 அடி, பத்தாயிரம் அடி.. ஏன் இங்கிருந்து நிலவுக்கு கூட அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தில் அமைத்துக்கொள்ளுங்கள். யாரும் உங்களை கேட்கப் போவது இல்லை. கடுமையான நிதி நெருக்கடியில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு மட்டும் பணம் உள்ளதா? எனவே இதை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+