கருத்து கணிப்பில் தேமுதிகவின் வாக்கு சதவீதம்! விஜயகாந்த் மீது நம்பிக்கை இழக்காத ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பில் தேமுதிக எத்தனை சதவீத வாக்குகளை பெற்றுள்ளது தெரியுமா?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அந்த தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதன் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும் காங்கிரஸ் (திமுக கூட்டணி) சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் நாம் தமிழர் சார்பில் மேனகாவும் தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்சி மீது புகார்களை கூறி வருகின்றன. கொலுசு, குக்கர், பணம், புடவை, பட்டுப்புடவை, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவைகளை வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு வருகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது குறித்த கருத்து கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மக்கள் ஆய்வு மையம்
பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம்தான் இந்த கருத்துக் கணிப்புகளை நடத்தி நேற்றைய தினம் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெல்வார் என கூறுகின்றன. இந்த கணிப்பில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளையும் அதிமுக 24.5 சதவீத வாக்குகளையும் பெறும்.

நாம் தமிழர் கட்சி
அதற்கு அடுத்த நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளையும் தேமுதிக 4 சதவீத வாக்குகளையும் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் இளம் வாக்காளர்களின் வாக்குகளில் 29.5 சதவீதம் நாம் தமிழருக்கும் 28.5 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் 17 சதவீதம் அதிமுகவுக்கும் 3 சதவீதம் தேமுதிகவும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு
இந்த கருத்து கணிப்பு முடிவுகளை வைத்து பார்த்தோமேயானால் தேமுதிகவுக்கு மிகப் பெரிய சறுக்கல்தான். முதலில் தேமுதிக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் எல் கே சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் இதை சுதீஷ் மறுத்தார்.

பிரச்சார களம்
இதையடுத்து பிரச்சார களம் சூடானது. எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன், பிரேமலதா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தனர். அதில் ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் ஆதரவளித்தால் அந்த தெம்புடன் கேப்டன் மீண்டும் வருவார் என்று பேசியிருந்தார். மக்கள் செல்வாக்கு தங்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் கருத்து கணிப்பு முடிவுகளில் வெறும் 4 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

நாம் தமிழர் முன்னேற்றம்
அதிலும் தேமுதிகவை விட நாம் தமிழர் கட்சி முன்னேறி செல்வதாக கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறுகையில் கருத்து கணிப்பு முடிவுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதைத்தான் காலம் காலமாக எங்கள் கேப்டன் கூறி வருகிறார். இருந்தாலும் நீங்கள் கேட்பதற்காக இந்த கருத்து கணிப்பு குறித்து சொல்கிறோம்.

4 சதவீதம்
4 சதவீதம் வாக்கு கிடைக்கும் என கருத்து கணிப்பு சொல்கிறது. இதை எதிர்மறையாக பார்க்கக் கூடாது. விஜயகாந்த் மீது நம்பிக்கையை இழக்காத மக்கள் இன்னம் ஈரோடு கிழக்கில் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள்தான் இவை! மேலும் தனித்து போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம் என கூறி பாருங்கள், அது நேர்மறையாக இருக்கும். 4 சதவீதம் 4 சதவீதம்னு சொல்றீங்களே! நாங்களாவது தைரியமாக போட்டியிட்டோம். பாஜக, அமமுக, ஓபிஎஸ் அணி, மக்கள் நீதி மய்யம் இவர்கள் யாராவது போட்டியிட்டார்களா.. இவர்களில் அமமுகவை தவிர மற்ற மூவரும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவைத்தான் தந்தனர். எனவே தில்லாக தைரியமாக திராணியுடன் போட்டியிட்டு சாதித்துள்ளோம் என்றே கருதுகிறோம்.

விஜயகாந்த்
இது இடைத்தேர்தல் தானே! இன்னும் எத்தனையோ தேர்தல் இருக்கிறது. 2024 இல் எப்படியும் கேப்டன் பூரண நலத்துடன் சிங்கம் போல திரும்பி வருவார். அன்று எங்கள் கட்சி யாரும் எட்டி பிடிக்காத உயரத்தை எட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தோல்வியே வெற்றிக்கு முதல் படி என சிறிய வயதில் படித்ததை நீங்கள் மறந்துவிட்டீர்களா, அதுபோல்தான் இதுவும். பணபலம், அதிகார பலம், பரிசு பொருள்கள் குறித்த புகாருக்கு நடுவில் இத்தனை சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம். இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என தேமுதிகவினர் தெரிவித்தனர். இந்த முடிவுகள் வெறும் கருத்து கணிப்புகள்தான். இதேதான் தேர்தலில் எதிரொலிக்கும் என சொல்ல முடியாது. நிச்சயம் தேமுதிகவுக்கு 4 சதவீதத்தை விட கூடுதலாக வாக்குகள் கிடைத்திருக்கும் என்றும் விஜயகாந்த் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கருதுவோமாக!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications