Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் பார்த்தீங்களா? மொத்தமா வந்த ஜவுளி வியாபாரிகளால் ஒரே பரபரப்பு.. டெல்லியை உலுக்கிய 43 B(H)

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டையே இன்று ஸ்தம்பிக்க வைத்திருக்கும், புதிய வருமான வரி சட்டம் 43 B(h) என்பது என்ன? ஜவுளி வியாபாரிகள் மொத்தமாக திரண்டு, கடையடைப்பு போராட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டி வர என்ன காரணம்?

சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை, வேகமாக வசூல் செய்வதற்கு வசதியாக, வருமான வரிச்சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

வருமான வரிச்சட்டம்: அதன்படி, செக்சன் 43 B (H) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, தங்கள் இருப்பு நிலை குறிப்பு (Balance Sheet) கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்படும். அதற்கு வருமான வரியும் செலுத்த வேண்டும். இதுதான் அந்த சட்ட மாறுதல்.

Do you know whats 43 B(h) and Erode 5 thousand Textile shops and stopped production of 50 thousand power looms shut down

இந்த சட்டமாற்றமானது, ஜவுளித்துறையை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கு என்கிறார்கள்.. காரணம், ஜவுளி தொழிலை பொறுத்தவரை, துணிகளை கொள்முதல் செய்து, பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என ஏகப்பட்ட விஷயங்களை கடந்துதான், விற்பனை செய்ய வேண்டி வருகிறது.. அதற்கேற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களின் கடன் தொகையை நேர் செய்வார்கள்.

புதிய சட்டம்: ஆனால், தற்போது வரப்போகும் புதிய திருத்தத்தினால், அந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், ஜவுளித்தொழில் கடுமையாக பாதிப்படையும்.

அதனால்தான், சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றே தெரிகிறது. பிறகு, ஒரு வருடத்துக்காவது இந்த புதிய விதிகளை அமல்படுத்தாமல் ஒத்திவைக்க வேண்டும் என்று ஈரோடு கிளாத் மெர்செண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதற்கும் மத்திய அரசுதரப்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
ஜவுளி கடைகள்:அதனால்தான், இன்றைய தினம் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஜவுளி வணிகர்களின் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் உடனடியாக ஆதரவு தெரிவித்தன.. அத்துடன் அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவுக்கரங்களை ஜவுளி தொழிலாளர்களுக்காக நீட்டிவிட்டன.

இதையடுத்து, ஈரோட்டில் ஜவுளி கடைகள் முழுவதுமே அடைக்கப்பட்டுவிட்டன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைதறி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும், உடனடியாக ஆதரவை தந்ததுடன் அவர்களும் சேர்ந்து இன்று கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன.

ஸ்தம்பித்த ஈரோடு: இன்று ஒரு நாள் கடை அடைப்பு நடத்தினால், ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகமும் பாதிக்கப்படும் என்றபோதிலும், வியாபாரிகள் இந்த கடையடைப்பை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு, பவானி, சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நடத்தும் ஜவுளி ஸ்டிரைக், டெல்லியின் பார்வையை திருப்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+