தோல்விக்கு காரணம்! இப்பவும் சொல்றோம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.. ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி அட்வைஸ்
ஈரோடு தேர்தல் முடிவுகளை பார்த்து மன வேதனை அடைந்ததாகவும், டெபாசிட் போய்விடுமோ என்றும் பயந்ததாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
ஈரோடு: ஈரோடு தேர்தல் முடிவுகளை பார்த்து மன வேதனை அடைந்தேன் என்றும், எங்கே டெபாசிட் போய்விடுமோ என்றும் பயந்ததாக ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் காலையில் இருந்து இந்த முடிவுகளை பார்த்து மன வேதனை அடைந்தேன் என்றும், எங்கே டெபாசிட் போய்விடுமோ என்றும் பயந்ததாக ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவளர்களின் ஆணவப்போக்கு, சர்வாதிகார போக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற மனநிலை யாரையும் அரவணரைத்து செல்லாத மனநிலை ஆகியவற்றால்தான் கட்சி இன்று வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று அவரை முன்னெடுத்து வைத்தார்களோ அன்று முதல் தொடர்ந்து தோல்விகள் தான் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை இழந்தோம். சட்டமன்ற தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி. இன்றைக்கு என்ன நிலை என்றால் கட்சியையும் இழந்து விடுவோமோ என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை இன்றும் சொல்கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. யார் ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை தொண்டர்கள் தூக்கி வீச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். காலையில் இருந்து இந்த முடிவுகளை பார்த்து மன வேதனை அடைந்தேன். எங்கே டெபாசிட் போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications