ஆசிட் டெஸ்ட்.. நோ சொன்ன அண்ணாமலை, எடப்பாடி.. நாம் தமிழருக்கு இதுதான் மிகப்பெரிய சவாலே.. என்ன ஆகுமோ!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் மோதல் திமுக vs நாம் தமிழர் என்று சுருங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கலன்று வேட்பாளரை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இது அந்த கட்சிக்கு கிட்டத்தட்ட ஆசிட் டெஸ்ட் போல மாறி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.

அதிமுக, பாஜக புறக்கணிப்பு:
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. நேற்று பாஜகவும் இதே அறிவிப்பை வெளியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிவிப்பு தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டமேதை அம்பேதகர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு தேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை. Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது. பொதுமக்களைப் பட்டியில் வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக. தேர்தல் விதிமுறைகளை திமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். ஆம் வரும் 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல் அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2029 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. நன்றி. என்று பாஜக கூறி உள்ளது.
நாம் தமிழர் vs திமுக:
இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் மோதல் திமுக vs நாம் தமிழர் சுருங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கலன்று வேட்பாளரை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இது அந்த கட்சிக்கு கிட்டத்தட்ட ஆசிட் டெஸ்ட் போல மாறி உள்ளது.
இரண்டு தரப்பிற்கும் இடையே நேரடி மோதல் நடக்க உள்ளது. இதன் மூலம் நாம் தமிழரின் வாக்கு வங்கி தெரிய வரும். அதிமுக இல்லாதபட்சத்தில் அவர்கள் வாக்கு நாம் தமிழருக்கு செல்லுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். நாம் தமிழர் உண்மையில் மாற்று சக்தியா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications