ஈரோடு பாண்டிச்செல்விக்கு பிறந்த குழந்தை.. கிட்ட பார்த்த கணவன், "என் ஜாடை இல்லையே? அதுக்கு இப்படியா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. குழந்தையை பறிகொடுத்த பாண்டிச்செல்வியை யாராலும் தேற்ற முடியவில்லை.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலம் ஈரோடு மாவட்டத்தையே அதிர வைத்து வருகிறது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்த்தாலும், பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிறது.. பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களும் பெருகி வருகின்றன.. மற்றொருபக்கம் குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Erode Child Pandi selvi

வலுவிழக்கும் குடும்ப உறவுகள்

குடும்ப உறவுகள் வலுப்பட வேண்டும் என்பதற்காக, இளம் தம்பதி ஒற்றுமை, அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் நீதிமன்றங்கள் மிகுந்த அக்கறையை செலுத்தி வருகிறது. எனினும், உறவுகள் சிதைந்து, உயிர்களும் பிரியும் நிலைமை வந்துவிடுகிறது.. இதோ ஈரோட்டில் ஒரு கொடுமை நடந்துள்ளது பாருங்கள்.

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குமார்.. இவரது மனைவி பெயர் பாண்டிசெல்வி.. இவருக்கு 24 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு வருடம் முன்பு இரட்டை குழந்தை பிறந்தது... ஒரு மகனும், ஒரு மகளும் இரட்டையாக பிறந்த நிலையில், தம்பதி இருவருமே மகிழ்ச்சி அடைந்தனர்.. மகளுக்கு தீபாஸ்ரீ, மகனுக்கு திவான் என்றும் பெயரிட்டனர்.

பாண்டிச்செல்விக்கு வந்த போன்

இந்நிலையில், இரட்டை குழந்தையில் திவானுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், கடந்த, 15ம்தேதி காலையில், பெண் குழந்தை தீபாஸ்ரீயை வீட்டில் கணவரிடம் விட்டு விட்டு, ஆண் குழந்தை திவானை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பாண்டிசெல்வி தூக்கி சென்றார்.. அன்று மதியம் பாண்டிசெல்விக்கு குமார் போன் செய்தார்.

"தீபாஸ்ரீக்கு திடீரென மூச்சு பேச்சு இல்லை.. மயங்கி விழுந்து விட்டாள்.. அதனால், எழுமாத்துார் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றேன்.. ஆனால், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொல்கிறார்கள்" என்றார்.

உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாண்டிச்செல்வி

இதைக்கேட்டதும் அதிர்ச்சியுற்று விரைந்து வந்த பாண்டிசெல்வி, மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, மகளை தூக்கி சென்றார்.. ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.. இதனால் உச்சக்கட்ட அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த பாண்டிச்செல்வி, தன்னுடைய மகளின் சந்தேகம் உள்ளதாக, மொடக்குறிச்சி போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசாரும், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டனர்.

இறுதியில் பெற்ற குழந்தையை கொலை செய்ததே குமார் என்பது தெரியவந்தது.. இதையடுத்து, குமாரை கைது செய்து விசாரித்தனர்.. அப்போது குமார் போலீசில் சொன்ன வாக்குமூலம் இதுதான்:

வாக்குமூலத்தால் அதிர்ந்த ஈரோடு

"இரட்டை குழந்தை பிறந்ததில் இருந்தே எங்கள் வீட்டில் பிரச்சனைதான். குழந்தைகள் இரண்டுமே என் ஜாடையில் இல்லை. அதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 15ல் வீட்டில் தனியாக டிவி பார்த்து கொண்டிருந்தேன். அப்போது தீபாஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள்... யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் பார்த்து கொள்ள வேண்டும்? என்ற ஆத்திரத்தில், தலையை பலமுறை சுவரில் மோதினேன்.. இதில் குழந்தை இறந்து விட்டது. இதை மறைக்க மனைவியிடம் பொய் சொல்லி வரவழைத்தேன்" என்றார்.

இந்த வாக்குமூலத்தையடுத்து, குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. ஒரு வருட பெண் குழந்தையை, கணவரே, சுவற்றில் அடித்து கொன்ற அதிர்ச்சியிலிருந்து பாண்டிச்செல்வி இன்னும் மீளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+