ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 2,36,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் , தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை விட 2,36,566 வாக்குகள் வாக்குள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் கார்மேன் 82796 வாக்குகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த ஈரோடு மாநகரம் கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான நகரம் ஆகும். ஈரோடு நகரம் மஞ்சள் மற்றும் ஜவுளிகளுக்கு உலக புகழ்பெற்ற நகரமாகும். காவிரி ஆற்றங்கரை நகரமான ஈரோடு அதிமுகவின் கோட்டை ஆகும். 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக இங்கு மொத்தமாக கைப்பற்றி அசத்தியது.

இந்த தொகுதி இதற்கு முன் திருச்செங்கோடு தொகுதியாக இருந்தது. இதில் 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.பேபி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வென்றுள்ளது.
ஆனால் திமுகவின் எழுச்சிக்கு பின் 1967 முதல் 1998 வரை அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றிபெற்றுள்ளன. 1998 லோக்சபா தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றார்.
திருச்செங்கோடு தொகுதி 2009க்கு பின்னர் ஈரோடு லோக்சபா தொகுதியாக உருவாக்கப்பட்டது . தொகுதிகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஈரோடு மேற்கு ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன. ஈரோடு தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,28,241 ஆகும் .
தொகுதி மறு சீரமைப்புக்கு பின் கடந்த 2009 லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தோற்கடித்து மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். ஆனால் 2014ம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் செல்வகுமார் சின்னையன் வெற்றி பெற்றார். ஆனால் 2019 தேர்தலில் மீண்டும் மதிமுகவின் கணேச மூர்த்தி வெற்றி பெற்றார்.
2024 தேர்தலை பொறுத்தவரை அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிட்டார். திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிட்டார். பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகனும் போட்டியிட்டனர்.
அதிமுக சார்பில் போட்டுவிட்டு அசோக்குமார் மற்றும் திமுக சார்பில் போட்டியில் பிரகாஷ் இடையே கடும் போட்டி நிலவுவதாக வெளியான கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஈரோட்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ஆற்றல் அசோக்குமார் தபால் வாக்கில் முன்னிலை வகிப்பதாகவும், திமுக வேட்பாளர் பிரகாஷ் பின்னடைவை சந்தித்திருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில் நேரம் செல்ல செல்ல பிரகாஷ் வெற்றி உறுதியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 2,36,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பிரகாஷ் 562339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 325773 வாக்குகள் வாக்குகள் பெற்றுள்ளார். 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 82796 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் விஜயகுமார் 77911 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications