"விபச்சாரம்".. இந்த மூணு பேரில் யார் வேணும்?.. சாய்ஸ் கேட்ட புரோக்கர்.. அப்படியே ஆடிப்போன போலீஸ்காரர்

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இளைஞர்களை குறிவைத்து செயல்பட்ட மசாஜ் சென்டரில், பெருந்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.. 3 பெண்களையும் மீட்டனர்..!
தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்..

அதன்படி, போலீசாரும் தங்கள் அதிரடிகளை அனைத்து பக்கமும் காட்டி வருகின்றனர்.. எண்ணற்ற ரவுடிகள் கைதாகியும் வருகின்றனர். பாலியல் சம்பவங்களில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

 மசாஜ் சென்டர்

மசாஜ் சென்டர்

அந்த வகையில், பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.. அப்படித்தான் பெருந்துறையில் சிலர் சிக்கி உள்ளனர்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை மெயின் ரோட்டில் தங்கும் விடுதி ஒன்றில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரின் மேனேஜர் பெயர் தானேஷ் குமார்.. இவர் திருப்பூரை சேர்ந்தவர். 30 வயதாகிறது.

 விபச்சாரம்

விபச்சாரம்

அந்த மசாஜ் சென்டரில் பல பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார்.. இதனால் அங்கு பல இளைஞர்கள் பணத்தோடு அந்த மசாஜ் சென்டருக்கு திரண்டு சென்று கொண்டிருந்தனர்.. இதுபற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த மசாஜ் சென்டரை மறைந்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தனர். பிறகு ஒரு போலீசார் மப்டி டிரஸ்ஸில், அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்தார்.. அங்கிருந்த தானேஷ் குமார், கஸ்டமர் வந்திருப்பதாக நினைத்து கொண்டு, மசாஜ் செய்து கொள்ள கட்டணங்களை கடகடவென சொல்ல ஆரம்பித்தார்.

 இளம்பெண்கள்

இளம்பெண்கள்

மசாஜ் செய்து கொள்ள ரூ. 2 ஆயிரம், மசாஜ் அழகியுடன் உல்லாசம் அனுபவிக்க தனியாக ரூ. 2 ஆயிரம் என்றும் பேரம் பேசியுள்ளார்.. அத்துடன் நில்லாமல் அங்கிருந்த 3 இளம்பெண்களையும் அவர் முன்பு வரிசையாக நிறுத்திவிட்டு, இவர்களில் யார் வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.. இதை பார்த்து அதிர்ச்சியான போலீசார், விபச்சாரம் நடப்பதை உறுதி செய்து கொண்டார்..

ஏடிஎம் பணம்

ஏடிஎம் பணம்

தானேஷ்குமார் சொன்ன கட்டணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டு, அங்கிருந்த 3 பெண்களில் ஒரு பெண்ணை அழைத்து கொள்வதாகவும் சொன்னார்.. பிறகு, ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு, வெளியே வந்து குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்... பின்னர், அந்த மசாஜ் சென்டருக்கு வெளியே தயார் நிலையில் மறைந்திருந்த, தனிப்படை போலீசார் மசாஜ் சென்டருக்குள் புகுந்தனர். மேனேஜர் தினேஷ்குமாரை அலேக்காக தூக்கி அரெஸ்ட் செய்தனர்...

 கொங்கு ஷாக்

கொங்கு ஷாக்

அந்த 3 பெண்களையும் மீட்டு மாவட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை ஜெயிலில் அடைத்தனர்.. இந்த மசாஜ் சென்டர் இயங்குவது சிட்டி பகுதியில் இயங்குவதற்கு காரணமே இளைஞர்களை குறி வைத்துதானாம்.. அங்கிருக்கும் காலேஜ், தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர்களை டார்கெட் செய்தே பெருந்துறையில் மசாஜ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. இதெல்லாம் கேட்டு கொங்கு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+